பக்கம்:சாமியாடிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

35

சாமியாடிகள் 35

ஆனாலும் இந்த வயசுல இந்தப் புத்தி ஆவாதும்மா. மருமவனே திருமல. அத்தை சுத்தன பீடியக் குடிச்சுப் பாரேன்."

அலங்காரி பேலன்ஸ் செய்து பேசியதால். திருமலை சும்மாவே நின்றான். துளசிங்கம் அங்கிருந்து, தான் முதலில் போனால் அது தோல்வியாகும் என்று அவனே ஒரு அனுமானம் போட்டுக் கொண்டவன் போல், அங்கேயே நின்றான். அண்ணாச்சி, அலங்காரியைத் தட்டிக் கேட்காததில் ஆத்திரப்பட்ட சந்திரா, எழுந்தாள். “இனுமே நீங்களும் வேண்டாம். ஒங்க வாடையும் வேண்டாம்" என்று சொன்னபடியே பீடித்தட்டைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். பிறகு, திரும்பி வந்து, கோலவடிவின் கையைப் பிடித்துத் தூக்கினாள். அவள் அங்கிருந்து போக விரும்பாதவள் போல், சந்திராவின் கையைப் பிடித்துக் கீழே உட்காரும்படி இழுத்தாள். உடனே சந்திரா, "ஒனக்காவ நான் சண்டை போட்டு எனக்குத்தான் கெட்டப்பேரு. உனக்கும் கதாநாயகியா நடிக்க ஆச" என்று சொன்ன படியே ஒடினாள். சிறிது நேரம் அங்கிருந்த கோலவடிவு, அப்படி ஒரு ஆசை தனக்கில்லை என்பதைக் காட்டும் வகையில், "ஏய் சந்திரா. சந்திரா. நில்லுழா" என்று கத்தியபடியே ஒடினாள்.

காகங்கள் மீண்டும் அந்த ஆலில் அமர்ந்தன. சிட்டுக் குருவிகள் பண்ணையாட்கள் போல், காகங்களிடம் இருந்து சிறிது மரியாதையான இடைவெளியில் உட்கார்ந்தன. ஒரு அணில், சிட்டுக் குருவியை இடம் கேட்டுத் துரத்தியது. ஒரு காகம், அந்த அணிலை இரை கேட்டுத் துரத்தியது. ஆனாலும் எந்தப் பறவைக் கொலையும் விழவில்லை. பெண்கள் மத்தியில் மீண்டும் முனகல் பாட்டுக்கள். துளசிங்கமும், திருமலையும் அந்த பெண்கள் கூட்டத்தின் துவாரக பாலகர்கள் போல் நின்றார்கள். ரஞ்சிதம், முத்தம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவளுக்குப் பீடி சுற்றிப் போட்டாள்.

இந்தச் சமயத்தில், பீடி இலையையும் துளையும் இழந்த தாயம்மாவும், காஞ்சானும் அங்கே ஒடி வந்தார்கள். இந்தக் காஞ்சானுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அவர் உடம்பில் சட்டை மாட்டி எவரும் பார்த்ததில்லை. ஒரு துண்டு மட்டும் தோளில் கிடக்கும். அதுவும் கைக்குட்டை மாதிரியான துண்டு. இப்படிச் சட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/37&oldid=1243314" இலிருந்து மீள்விக்கப்பட்டது