பக்கம்:சாமியாடிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

சு. சமுத்திரம்

36 சு. சமுத்திரம்

இல்லாமல் வெயில்பட்டு, அவர் கறுத்த உடம்பு, சூரிய ஒளியைப் பிரதிபலிக்காமல் உள்வாங்கிக் கொண்டதால், அவர் உடம்பு காய்ந்த கருவ மரம் போல் காட்சி காட்டும். அவருக்குக் கையளவுகூட வயிறு கிடையாது. முன்பக்கமும், பின்பக்கமும் ஒரே பக்கம் என்பது போன்ற 'ஒட்டியான வயிறு போதாக் குறைக்கு உடம்பு லேசாய்க் கூன் போட்டு உள்வாங்கி இருக்கும். இதனால் இவரை, ஊரில் காஞ்சான் என்பார்கள். ஆனாலும் இந்த மனிதர் வக்கணையில்தான், காஞ்சான். வசதியில் ஏகப்பட்டவர்.

தாயம்மா, காஞ்சானுக்கு எதிப்புறமாய் நின்றபடியே முறையிட்டாள்.

"பாருங்க. இவர் மகன்தான் என் பீடித்தட்ட தட்டி விட்டுட்டுப் போனான். இலைக்கும் துளுக்கும் காசு கேட்டா. என்னென்னவோ பேசுறார்."

"எனக்கு கறிவேப்புல மாதிரி இருக்க ஒரே ஒரு பயலயும் ஆல மரத்துல இருந்து கீழே தள்ளிப் போட்டதுமில்லாம காசு கேட்குறியோ. காசு. இப்ப என் பையனுக்கு வருமப்பிடி மாதிரி வந்துட்டு. வைத்தியர் கிட்ட காட்டணும். தாயம்மாகிட்ட காசு வாங்கித் தாறியளா. இல்ல நானே வசூலிச்சுக்கட்டுமா..."

தாயம்மா புலம்பினாள்.

"பாருங்க இந்த மனுஷன் பேசுற அநியாயத்த. நான் சட்டம் பேசறேன்னு ஏற்கனவே பீடி ஏஜெண்ட் துரைச்சாமி எனக்கு நாள் பார்த்துக்கிட்டு இருக்கான். இப்போ கொடுத்த இலைக்கும் தூளுக்கும் பீடி போடாட்டா. அப்புறம் பீடிய சுத்த முடியாமப் பண்ணிடுவான்."

"இப்போ என் பயல் கால் பிசகியோ. கை பிசகியோ.. கட்டுலுல கிடக்கான். அதுக்கு அவளை பதில் சொல்லச் சொல்லுங்க... அஞ்சு பத்து ரூபாயாவது வேணும்."

அலங்காரி விலக்குத் தீர்த்தாள்.

"மச்சான் அப்படிச் சொல்லப்படாது. அவளுக்கு ஏதாவது கொடுக்கணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/38&oldid=1243315" இலிருந்து மீள்விக்கப்பட்டது