பக்கம்:சாமியாடிகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

307

இன்னைக்கே இந்த ஊரை விட்டு. நீ போயிடணும். இல்லன்னா நாங்களே விரட்டுவோம்."

ரஞ்சிதம் இடுப்பில் கை வைத்தபடி திருப்பிக் கத்தினாள். "இது எங்க அம்மா அப்பா நடமாடுன வீடு. மூதாதையர் கால்பட்ட

இடம். நான் பிறந்த பூமி. ஆயிரம் துளசிங்கம் வந்தாலும், என்னை

அப்புறப்படுத்த முடியாது. வேணுமுன்னால் நீங்க இந்த ஊரைவிட்டுப் போங்க. நான் போகப் போவதாய் இல்ல."

கோலவடிவு, வளைகோடாய் எழுந்தாள். ரஞ்சிதம் கத்துவதையும், அவளின் உறவினர்கள் திருப்பிக் கத்துவதையும் அதனால் ஏற்பட்ட கூச்சலையும், குழப்பத்தையும் குழப்பத்தோடு பார்த்தாள். "நானே அவள வெளில இழுத்துப் போடுறேன் பாரு" என்று துளசிங்கம் கத்தியது ஊருக்கே கேட்டாலும், அவளுக்கு லேசாகத்தான் கேட்டது. அவள் எழுந்தாள். கொல்லைப்புறத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.

39

ரஞ்சிதத்தின் வீட்டுக்குப் பின்னால் வந்த கோலவடிவு, மேற்குப் பக்கமாக நடந்தாள். பின்னர் தெற்குப் பக்கமாக நடந்து குளத்துக் கரைக்குப் போனாள். அங்கிருந்து கரையிலே நடந்தாள். தரையிலே இறங்கினாள். வயல்களில் கால் சிக்க வரப்புக்களில் கால் முட்ட, நடந்து நடந்து, அந்த ஊரையே வலம் வந்து, நஞ்சை வயல்களைத் தாண்டி, புஞ்சை வயல்களில் பாய்ந்து, புளியந்தோப்புக்கு வந்து, மூச்சு விட்டாள். பிறகு சோளத் தோட்டம் வழியாக ஊடுறுவி, பருத்திக் காட்டிலே பதுங்கி, அந்த ஆலமரத்தடி காளியம்மனின் பின்புறமாக நடந்து, முன்புறமாய் வந்தாள். ஆலமரம் வெறிச்சோடிக் கிடந்தது. அம்மன் கோவில், அனாதைகள் இல்லாத இல்லமாய் வெறுமையுடன் தோன்றியது. அந்தக் கோவிலின் இரண்டு நிலைக் கதவுகளும் பூட்டில்லாமல் ஒதுங்கிக் கிடந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/309&oldid=1244195" இலிருந்து மீள்விக்கப்பட்டது