பக்கம்:சாமியாடிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

45

சாமியாடிகள் 45

அருணாசலம் மனைவியின் வலுவால் இழுக்கப்படாமல், வேட்டி அவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தால் அப்படியே நின்றார். அதைப் பார்த்த அலங்காரியும், குறுஞ்சிரிப்போடு வந்தாள். அருணாசலம், அவளிடம் நெருங்கி வந்தார். "என்னழா. செறுக்கி பலவட்ற" என்ற வசவு மொழிகளைச் சுமந்து நின்ற அவரது வாயை, அலங்காரி பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும், அடைத்துவிட்டன. ஏதோ ஒரு கிறக்க சுகத்தில், என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் விழித்தபோது, அவரது அருமை மனைவி பேச்சியம்மா, முன்னேறினாள். வெடவெடத்த உடம்புக்காரி. தலைமுடி நான்கு பக்கமும் மொக்கையாக நிற்பதால் அவளை பம்பை என்பார்கள். எவ்வளவு படி எண்ணெய் தேய்த்து, எவ்வளவு பெரிய சீப்பால் வாரினாலும், அவள் தலையில் முன்பக்க, பின்பக்க தலைமுடியை ஒன்றும் செய்துவிட முடியாது. அசல் கரடி முடி.

'பம்பை, அலங்காரி முன் வந்து அரட்டினாள். "ஆமாடி கேட்க ஆளில்லன்னு ஒனக்கு எண்ணமா." "என்ன தங்கச்சி சொல்லுதே." "தங்கச்சி பொல்லாத தங்கச்சி. எங்கப்பன் என்ன ஒங்கம்மாவை வச்சுட்டு இருந்தானா."

"எங்கப்பன் ஒங்கம்மாவை வச்சுட்டு இருந்தாலும். நீ எனக்கு தங்கச்சிதான். ஆனால் நான் அப்படி நாகரீகக் குறைவா பேச மாட்டேன்."

“நாகரிகம். து நாயே... ஒனக்கா நாகரிகம். பட்டப்பகலுலயே அடுத்தவனுக்கு முந்தாணி விரிக்கிற எச்சிக்கல இரப்பாளி. வந்தட்டி மஞ்சக் கடஞ்சா."

"இந்தா பாரு தங்கச்சி. மரியாதி குடுத்து மரியாதி வாங்கு” "மரியாதைய வாங்கவும் ஒரு தகுதி வேண்டாம்.? ஒனக்கு எதுக்குழா மரியாதி. எதுக்குழா என் மச்சான் மகள் கோலவடிவை சினிமாக்காரின்னு சொல்லுரே. சினிமாவுல நடிக்க ஆச இருந்தால் நீ நடி. ஊர்ல கண்ட கண்டவங்ககூட எல்லாம் நடிக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/47&oldid=1243324" இலிருந்து மீள்விக்கப்பட்டது