பக்கம்:சாமியாடிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

சு. சமுத்திரம்

46 சு. சமுத்திரம்

ஒனக்குத்தான் நடிப்பு நல்லா வருமே. எங்க குலமான் கண்ணு கோலத்தை எப்படிமா சொல்லலாம். ஒன்னை மாதிரி கண்டவன் கிட்டயெல்லாம் பல்லு இளிக்கிறவள்தான் சினிமாவுல நடிக்கணும். என் ராசாத்தி கோலவடிவு ஏன் நடிக்கணும்."

"அற்ப விஷயத்த பெரிசாக்குறே." "யாருழா அற்பம். இன்னொரு தடவ சொல்லு." "ஒனக்கு காது கேக்காட்டா நான் என்ன பண்ணுறது.”

"எனக்கு அப்படியே காது கேக்காட்டாலும், ஊர்ல நீ ஆடுற ஆட்டமும் போடுற போடும் நல்லாவே கேக்குது."

"எதையும் ருசிப்படுத்தாம பேசாத தங்கச்சி. ஒனக்கும் ஒரு பொண்ணு இருக்காள்:”

"என் பொண்ணுக்கு சாபமாழா போடுற சண்டாளி. கடைசில ஒன் புத்தியக் காட்டிட்ட பாத்தியா."

"என் புத்திய அப்டி என்னத்த கண்டுட்ட பெரிசா.”

"நம்ம ஊர்ல கல்யாணம் ஆகுமுன்னே ஆட்டம் போட்டு ஒரு கள்ளப்பிள்ள கழிச்ச. கழுத்துல மஞ்சக் கயிறு விழுந்த பிறகாவது சும்மா இருக்கலாம். இருந்தியா. கல்யாணம் ஆன ஆறாவது மாசத்துலேயே காஞ்சான் அண்ணாச்சிய காலி பண்ணுனே. வெளியூரிலே இருந்து வந்த மிளவத்தல் வியாபாரிய மடக்கிப் போட்டு காசு பறிச்சே... எங்கேயோ இருந்து வந்த டெய்லரை. மொட்டையடிச்சே ஒயர்மேன ஒட்டாண்டியாக்குன. செம்பட்டையான் குடும்ப மானம் பொறுக்காம குதியோ குதின்னு குதிச்ச எலி டாக்டரையும் மடக்கிப் போட்டே. நல்ல வேளையா ஒன் பொண்ணு டவுன்ல வேல கிடச்சதும் ஒன்கிட்ட வராம தப்பிச்சுட்டா. இல்லாட்டா அவளையும் எவன்கிட்டயாவது."

அலங்காளி குன்றிப் போனாள். இப்படிப்பட்ட அர்த்தத்தில்தான், இந்தச் சந்திராவும் பேசினாள். ஆனால், இந்த பேச்சியம்மாவைப் போல் எவளும் இப்படி லிஸ்டைப் படித்ததில்லை. அந்த லிஸ்டைவிட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/48&oldid=1243325" இலிருந்து மீள்விக்கப்பட்டது