பக்கம்:சாமியாடிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

47

சாமியாடிகள் 47

அவள் லிஸ்ட் பெரிதுதான். என்றாலும் அங்கே அம்மணமாக இருப்பது போல் உணர்ந்தாள். இந்தப் பேச்சியம்மா, கோலவடிவை, தான் கதாநாயகியாக்க மேற்கொண்ட முயற்சிக்காகப் பேசவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். இருவரும் திருமணமாகாமல் கட்டாம்பட்டியில் குமரிகளாய்ச் சுத்தியபோது, பேச்சியம்மா, மாமா மகன் முறை வேண்டிய ஒரு வாத்தியாரைக் காதலித்து, தொட்டதுண்டு. கெட்டதுண்டு. அலங்காரிக்கும், வயசுக் கோளாறா. அதே அந்த வாத்தியாரை இந்த அலங்காரி பயன்படுத்தினாளா.. அல்லது அந்த வாத்தியார் பயன்படுத்தினாரா என்பதைச் சொல்ல முடியாது. எப்படியோ ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொண்டதில், பேச்சியம்மா காதல் அறுபட்டு, கடைசியில் காதறுந்த ஊசி போல் ஊசிப் போனது, கடைசியில் பேச்சியின் கழுத்தில் அருணாசலம் கயிறு போட்டார். இந்தப் பழைய பகையைக் கோலவடிவு நிகழ்ச்சி மூலம் பேச்சியம்மா புதுப்பிக்கிறாள் என்பது அலங்காரிக்குத் தெரியும். ஆனால் வெளியில் சொல்ல முடியாது. அதுவும் இந்த வீட்டில் வைத்து சொல்லமுடியாது. கொலையே விழும். அப்புறம் வேண்டுமானால் துளசிங்கத்தை வைத்து, அந்த விவகாரத்தைச் சொல்ல வைக்கலாம். ஆனால் இப்போ.

ஒடுற நாயைக் கண்டால் விரட்டுற நாய்க்குத் தொக்கு என்பதுபோல், அலங்காரியின் மெளனம் பேச்சியம்மாவை இன்னும் அதிகமாகப் பேச வைத்தது.

"பதில் சொல்லேமிழா. பத்தினி. கண்டவன் பின்னாலல்லாம் சுத்துற நாயி நீ. இப்படி இருக்கயில எங்க மச்சான் மவளை சினிமாக்காரின்னு சொல்லுறதுக்கு எத்தனாவது சட்டத்துலழா இடமிருக்கு.? சொல்லுழா. கைகேயி. சொல்லுழ கூனி. சொல்லுழா சூர்ப்பனகை."

குன்றிப்போய் நின்ற அலங்காரி திடீரென்று தன் தலையிலே பட்டுப்பட்டென்று அடித்துக் கொண்டாள். வாயிலும் வயிற்றிலும் மாறிமாறி அடித்து, நிசமாவே புலம்பினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/49&oldid=1243326" இலிருந்து மீள்விக்கப்பட்டது