பக்கம்:சாமியாடிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுரை

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாவல் இது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் நாளிதழில் தொடர் கதையாக வெளியானது. தினரகன் ஆசிரியர் திரு கே.பி. கந்தசாமி அவர்களுக்கும், என்னிடம் இந்த தொடருக்கு ஏற்பட்ட தாக்கங்களை அவ்வப்போது தெரிவித்த நண்பர் சின்னராகக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இன்னும் நமது மனம் உள்வாங்கிக் கொள்ளாத சென்ற நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில், உடலை ஊடுறுவி அதன் உறுப்புக்களை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்க்க வைக்கும் ஸ்கேனிங் என்ற முறையும், உடனடியாகப் படம் பிடித்து, உடனடியாக படம் பிடித்தவரிடமே அவரது உருவத்தையும் பேச்சையும் திரையில் காட்டும் வீடியோ முறைமையும் , இன்டர்நெட் இணையமும் சமூக முறைமையையே தலைகீழாகப் புரட்டி விட்டது என்று சொல்லலாம். இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தாமல் அடியோடு மனோவேகத்தில் மாற்றங்களை கொண்டு வந்துவிட்டன.

இப்படிப்பட்ட இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளில், வீடியோ - சமூகத்தில் நல்லதும் கெட்டதுமான பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, இன்றையக் கிராமங்களில் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்கும் படைப்புதான் 'சாமியாடிகள்" என்ற இந்த புதினம் என்றாலும் இதில் வீடியோ- ஆடியோ தாக்கம் இலைமறைவு காய்மறைவாகக் காட்டப்பட்டு, இதன் விளைவுகளால் ஏற்பட்ட கதையம்சமே இந்தப் புதினத்தில் மேலோங்கி நிற்கிறது. பிரபல விமர்சகரும் பொதுவுடைமைச் சிந்தனையாளருமான தொ.மு.சி. அவர்கள், இந்த நாவல் வீடியோ ஆடியோவான விஞ்ஞானத் தாக்கத்தின் நல்ல அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். இது ஒரளவு உண்மையே. எடுத்த எடுப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/5&oldid=983073" இலிருந்து மீள்விக்கப்பட்டது