பக்கம்:சாமியாடிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாமியாடிகள்

53

வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். இப்போதுகூட அவள், தன் உடல்வாகில் ஏதோ கோளாறு என்று எண்ணி, கண்டவனை எல்லாம் போட்டுக் கதவைச் சாத்துவதாக நினைக்கிறாள். அவள் பிரச்சினை உடலைப் பற்றியது அல்ல. மனதைப் பற்றியது என்று யார் புரியாதவள். காலில் உள்ள புண்ணுக்குத் தொடையில் நெறிக்கட்டுவது போல், காயங்கள் பாலுணர்வு நெறியாகப்படுத்துறது என்பதை யார் சொல்வது?

அலங்காரி, அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். இப்போது அவளுக்குத் தேவை ஒரு ஆண்...அது, அவன் கணவனாக இருந்தாலும் கவலை இல்லை. எழுந்து நின்ற அலங்காரி, மேற்கே உள்ள புளியந்தோப்பை ஊருருவிப் பார்த்தாள். கிழக்கே உள்ள கரும்புத் தோட்டத்தை ஏறிட்டுப் பார்த்தாள். வடக்கே பனங்காடு. தெற்கே பஸ் ரோடு, அவளுக்குத் தெரிந்த - அவளைத் தொட்ட காஞ்சானைக் காணோம். எலி டாக்டரைக் காணோம்...மிளகுவத்தல் வியாபாரியைக் காணோம்... பீடி ஏஜெண்ட் பால் பாண்டியைக் காணோம்... எவன் மடியும் எட்டவில்லை. எவன் கையும் தலையைக் கோதிவிட இல்லை...

அலங்காரிக்குப் பாலுணர்வுப் பாசாங்கு ஏக்கம், பழிவாங்கும் எண்ணமாக மாற்றமெடுத்தது. ஊருக்கெல்லாம் நியாயம் பேசும் பழனிச்சாமி, அவர் தம்பி மனைவி பேச்சியம்மாவை ஏவி விட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதவன் போல் நடித்தான். அவன் பொண்டாட்டி பாக்கியம், கொழுந்தன் பொண்டாட்டி திட்டுறது சரி என்பதுபோல் மோர் கொடுக்காமல் அலட்சியப்படுத்தினாள்... திருமலைப் பயலோ, ஒரு வார்த்தை தட்டிக் கேட்கவில்லை. கரும் பட்டையான் பயல்களில் ஒருத்தன்கூட, அப்போதைக்காவது அனாதரவாய் நின்ற தன்மேல் கருணை காட்டவில்லை... சொக்காரப் பயல்களான செம்பட்டையான்களோ கேட்கப் போவதில்லை. இதே கேள்வியைப் பேச்சியம்மா, காஞ்சான் பொண்டாட்டியை கேட்டிருந்தாலோ, தன்னுடைய இன்னொரு மச்சானின் மகளான தாயம்மாவைக் கேட்டிருந்தாலோ, இந்நேரம் கொலை கொலையாய் விழுந்திருக்கும். என்னைக் கேட்டால் யாரும் கேட்க மாட்டாங்க... நானேதான்... கேட்கணும்... ஒத்தைக்கு ஒத்தையாய்... அதுவும் ஒரு பொம்புளை எப்படிக் கேட்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/55&oldid=1388273" இலிருந்து மீள்விக்கப்பட்டது