பக்கம்:சாமியாடிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

55

சாமியாடிகள் S5

அலங்காரி சுடலை மாடனைத் தியானித்தபடி, கைகால்களை ஆட்டாமல், அசைக்காமல் அப்படியே இருந்தாள். வெட்டரிவாள், குறுக்குத்தடி, குல்லாய் ஆகியவற்றுடன் கூடிய சுடலைமாட சாமியைக் கும்பிட்டபடியே, கரும்பட்டையான் குடும்பத்தைத் திட்டினாள். அப்போது

அவள் தோளை யாரோ தொடுவது போலிருந்தது. காஞ்சானோ, எலி டாக்டரோ என்று கண் விழித்தாள். கோலவடிவு.! அவள் தோளைத் தொட்டபடி குனிந்து நின்றாள். பிறகு, அந்த தோளையே பற்றுக்கோலாகப் பிடித்து கீழே உட்கார்ந்து விம்மினாள். அலங்காரியைக் கட்டிப் பிடித்து அழுதாள்.

"ஒங்கள பேச்சியம்மா சித்தி. அப்படிப் பேகனதுல. எனக்கு சம்மதமில்ல. அத்தே. எல்லாம் என்னால வந்ததுன்னு நினைக்கும் போது, மனசு கேட்க மாட்டேன்குது. அத்தே. ஒங்கள எல்லாருமா.. நாயப் பேசுனது மாதிரி பேசிட்டாவுளே. அத்தே. என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அத்தே."

அலங்காரி கோலவடிவை ஒரு கணம் பார்த்துவிட்டு, மறுகணம் ஆகாயத்தை நோக்கி, கையெடுத்துக் கும்பிட்டாள்.

"என்னை எதுக்கு அத்தை கும்பிடுதிய. எங்க சித்தியும் சந்திராவும் ஒங்கள பேசியிருக்கப் பேச்சுக்கு. நான்தான் அத்தே. ஒங்க காலுல விழுந்து புரளணும். லேசா சிரிங்க அத்தை. நீங்க சிரிக்கணும். சிரிச்சே ஆகணும். என்னை அப்பிடி கும்பிடாதிங்க. அத்தே. ஒங்கள இப்போ பார்த்தபிறவுதான். அதுவும் அந்தச் சிரிப்போடு பார்த்த பிறவுதான் மனசு லேசாகுது அத்த."

அலங்காரி கோலவடிவை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவள் வளர்க்கும் பலிகிடாவை அணைப்பாளே அப்படி! பிறகு அவள் மனத்தைத் தட்டிக் கொடுத்துப் பேசினாள்.

"ஒன்னை இப்போ பார்க்கும்போது அத்தைக்கு எவ்வளவு

சந்தோஷமா இருக்குது தெரியுமா. நீ ஒருத்தி இந்த சனத்துல சொன்ன ஆறுதல். ஒரு கோடி பேரு சொன்னதுக்குச் சமம். நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/57&oldid=1243336" இலிருந்து மீள்விக்கப்பட்டது