பக்கம்:சாமியாடிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

57

சாமியாடிகள் S7

வச்சி. பேச்சி தலய மொட்டையடிக்கப் போறேன். பழனிச்சாமிய. படுத்த படுக்கையாக்கப் போறேன். எவளும். சந்தர்ப்பம் கிடைச்சால் ஒடிப் போறவள்தான்னு நிரூபிக்கப் போறேன். இதனால. இந்த கோலத்தோட வாழ்க்க பாதிக்காது. துளசிங்கம் என்ன மட்டமா. கரும்பட்டையான் வகையறான்னா கற்புக்கரசின்னு பய மவளுவ. மார் தட்டுறவளே. அப்படி தட்டுற கையத்தான் தடுக்கப் போறேன். அதோட இது சுடலைமாடன். உத்தரவு.

அலங்காரி பழியைச் சுடலைமீது போட்டுவிட்டு, கோலவடிவை, தனது ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பிறகு "ஒரு விஷயம். ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும் உட்காரு" என்றாள். கோலவடிவு உட்கார்ந்தபோது, அலங்காரி, தலையைச் சொறிகிற சாக்கில், துளசிங்கத்தை அருகே வரும்படி சைகை செய்தாள். அவனும் அந்தக் கையாட்டத்தைக் கண்டவன்போல் நடையை ஒட்டமாக்கி வந்தான்.

பச்சைநிற வெட்டுக்கிளி ஒன்று தத்தித் தத்திக் குதித்து, அலங்காரியின் பாதத்திற்குள் சிக்கியது. வேலிக்காத்தான் பூ ஒன்றை, ஒரு ஒணான் கடித்துக் கீழே போட்டது. காகம் ஒன்று தங்கரளிச் செடியில் ஏறிய அணிலின் குஞ்சைக் கொத்திவிட்டுப் போய்விட்டது. வேதனை தாளாத அந்த அணில் மூக்கில் ரத்தம் சொட்ட அங்குமிங்குமாய்த் துடித்தது.

அலங்காரி கோலவடிவை ஒட்டினாற்போல் உட்கார்ந்திருந்தாள். ஐந்தாறு சின்னச் சின்னக் கற்களாகப் பொறுக்கி எடுத்து, அவற்றை வலது புறங்கையில் வைத்து, அப்படியே கையை மாற்றிக் கற்களை உள்ளங்கைக்குக் கொண்டு வந்தாள். அவள் ஏதோ பெரிய விஷயத்தைச் சொல்லப் போவதாக நினைத்த கோலவடிவு அவசர அவசரமாய்க் கேட்டாள்.

"ஏத்த, ஏதோ சொல்லணுமுன்னு சொன்னியே."

"அத மறந்துட்டேன் பாரு. ஏம்மா கோலம். ஏன் படிப்ப பத்தாவதோட முடிச்சுட்டே...? நீதான் பள்ளிக்கூடத்துலயே பஸ்ட்ல வந்தியாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/59&oldid=1243338" இலிருந்து மீள்விக்கப்பட்டது