பக்கம்:சாமியாடிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

சு. சமுத்திரம்

58 சு. சமுத்திரம்

"அந்த அநியாயத்த ஏன் அத்த கேட்கிறிய. பத்தாவது வகுப்புல எல்லா பாடத்துலயும் நான்தான் பஸ்ட். பிளஸ்டுவுல சேரப் போனேன். கோணச் சத்திரத்துல பள்ளிக்கூடம் இருக்கதால அப்பாவும் சரின்னுட்டாரு. ஆனால் எங்கம்மா வயசுப் பொண்ணுக்கு படிப்பு வேண்டான்னுட்டாள். பேச்சியம்மா சித்தியும் ஒத்துப் பாடிட்டாள்."

"அவளுக்கு அவள் மகள் சந்திரா படிக்காமப் போனதால நீயும் படிக்கக்கூடாதுன்னு நல்லெண்ணம் வந்திருக்கு."

"என்ன எழவோ. அப்போ என்கூட படிச்சவங்க-இப்போ காலேஜ்ல பி.ஏ, பி.எஸ்.ஸி. படிக்கிறாவ. அவளுவளப் பார்க்கும் போதுல்லாம் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்னுது. அம்மாவ திட்டித் தீர்த்துடனும் போல வருது."

"அம்மாவோா. அப்பாவோ. ஒருத்தி தன்னோட வாழ்க்கையை தான்தான் அமைச்சுக்கிடணும்."

"நான் வர்றேன். அத்த. வீட்ல தேடுனாலும் தேடுவாங்க.."

"குறையும் கேட்டுட்டுப் போம்மா. அத்த சொல்றேன்னு தப்பா நினைக்காத நீ வயல் வரப்புக்கு போகாத பொண்ணு. ஒனக்கு ஒங்க வயலு முழுதும் எங்க இருக்குதுன்னு தெரியாதுதான். அப்படிப் பட்ட நீ விவசாயிக்கு வாழ்க்கப்பட்டியானால். அவன் எவ்வளவுதான் பணக்காரனாய் இருந்தாலும் வயல் வேலைக்குப் போயாகணும். அதே புருஷன் கடை கண்ணி வச்சிருக்கவனாயும் நாடுநகர் சுத்தப் பார்த்தவனாயும் இருந்தால் முற்றத்து வெயிலுகூட முதுகுல படாம வாழலாம்."

"எங்கப்பாவுக்கு இதுல்லாம் தெரியாமலா இருக்கும்.? நான் வாறேன் அத்த."

"செத்தே இரும்மா.. எதுல குறை வச்சாலும் புத்தியில மட்டும் குற்றம் குறை வைக்கப்படாது. ஒங்கப்பா ஒன்னை நல்ல இடத்துல வைக்க ஆசைப்படுவார்தான். ஆனால் நல்ல இடம் என்கிறத தீர்மானிக்கிறதுலதான் கோளாறு வாரதுண்டு. மொத்தத்துல. இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/60&oldid=1243339" இலிருந்து மீள்விக்கப்பட்டது