பக்கம்:சாமியாடிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

59

சாமியாடிகள் S9

அத்த விரும்புறது ஒனக்கு புருஷனா வாரவன் வேட்டி சட்டையே போடப்படாது."

"என்னத்த நீங்க.."

"பேண்ட் சட்டை போட்டவனாய் இருக்கணுமுன்னு சொல்ல வந்தேன். சிரிப்பப் பாரு. நீ சிரிக்கும்போது தாமரைப்பூ விரிஞ்சது மாதிரி இருக்குது. சரி புறப்படு. ஒனக்கும் நேரமாயிட்டு. என்ன காலடிச் சத்தம்? யார் வாரது."

"துளசிங்கம் மச்சான் வாரார். அவர் கிட்ட எங்கண்ணா தப்பா நடந்ததுக்கு நான் ரொம்ப ரொம்ப வருத்தப்படுறதாய் சொல்லுங்க அத்தே."

"இதோ அவனே வந்துட்டான். நீ சொல்லு என்ன துளசிங்கம் கோலத்த அப்படிக் பாக்கே."

"இந்தப் பொண்ணு இங்க எதுக்காக வந்தாள். இழுத்த சண்டை போதாதுன்னா..."

"நான் வாறேன் அத்த."

"ஒரு நிமிஷம்மா. ஏண்டா துளசிங்கம். ஒனக்கு ஏன் தராதரம் தெரிய மாட்டேக்கு.? பாவம் கோலவடிவு. ஆலமரத்துச் சண்டைக்காவ ரொம்ப வருத்தப்படுறாள். ஒன்னை அவங்க அண்ணாச்சி அப்படித் திட்டுனதுக்கு துடியாய் துடிக்காள். நீ என்னடான்னா அவள் மனசு புரியாம எரியற நெருப்புல எண்ணெய்ய ஊத்துற."

"ஆனால் அந்த நெருப்ப வச்சது கோலவடிவுதானே.”

"சரி அப்படியே வச்சுக்க. இப்போ பத்தவச்சங்களே நெருப்பு அணைக்கும்போது நீ எண்ணெய ஊத்துனால் எப்டி. பாவம் கோலம். ஒன் மனசு உடஞ்சு போனதுக்காவ ஆளே உடஞ்சுட்டாள்."

"நீ இட்டுக்கட்டிப் பேசுனாலும் பேசுவே. சித்தி. கோலவடிவே சொன்னாத்தான் நான் நம்புவேன்."

"சரிப்பா, நீ என்னை நம்பாண்டாம். ஒன் மாமா மகளே சொல்லுவாள். கோலவடிவு ஒன்னத்தான். நான் சொன்னது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/61&oldid=1243481" இலிருந்து மீள்விக்கப்பட்டது