பக்கம்:சாமியாடிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

67

சாமியாடிகள் 67

சீமைச்சாமி திறந்துவிட்ட கதவு வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். காஞ்சான். எலி டாக்டரைப் பார்த்துத் திடுக்கிட வில்லையானாலும், சங்கடப்பட்டார். எல்லாருக்குமே ரகசியமாய்' தெரிந்த விஷயங்களை பகிரங்கமாச் சொல்ல முடியுமா என்ன. காஞ்சான் தார்சாவுக்கு வந்து, பெஞ்சில் எலி டாக்டர் பக்கத்தில் உட்கார்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வெளியேற்றுவதில்

ஈடுபட்டார்கள்.

"சிமெண்ட் கடை போடப்போறேன். அப்பாவக் காணுமேன்னு ஒன் மவன் துளசிங்கம் ஊரு பூராவும் ஒன்னைத் தேடிக்கிட்டு இருக்கான். நீ இங்க வந்து ஜம்முன்னு இருக்கே."

"இன்னக்கி வயலுல நடுவைன்னு சொன்னே. வேலையாட்கள மேல் பாக்கதுக்காவ போகாண்டாமா. நீ போகாட்டால் திருட்டுப் பய பிள்ளிய சரியா நடாது. நாத்து தண்ணிலயே முங்கிப் போகும்.”

"இந்த வயசுக்கு மேல நம்மால வேல பாக்க முடியாது. பயலுவ எதுக்கு இருக்கான். கவனிச்சுக்கு வாங்க."

"ஒன்னை கவனிச்சுட்டுத்தான் இருக்காங்க.." "தன்னை மெச்சிக்கிட்டாம் தவிட்டுக் கொழுக்கட்டை ஈயத்தைப் பார்த்து இழிச்சுதாம் பித்தள."

அவர்கள் பேசுவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த அலங்காரி, அவர்களில் அப்போதைக்கு எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பிரச்சினை இல்லை. துளசிங்கம் சொல்ல வேண்டியதச் சூட்சகமாகச் சொல்லிவிட்டான். எவரைப் பகைத்தாலும் அவனைப் பகைக்கப்படாது. இந்த மனுஷனை அவன் கண்ணுமுன்னால் கடைசில காட்டினால்தான் சித்தி திருந்திட்டாள்னு நினைக் காட்டாலும், திருந்தி வாரான்னு நினைப்பான்.

அலங்காரி சாமர்த்தியமாகப் பேசினாள்.

"மச்சான் நம்ம பையன் சிமெண்ட் கடை போடுறாமுல்லா. நீரு பெத்தப்பன். கற்பூரம் ஏத்தும்போது நிக்காண்டாமா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/69&oldid=1243496" இலிருந்து மீள்விக்கப்பட்டது