பக்கம்:சாமியாடிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சு. சமுத்திரம்

68 க. சமுத்திரம்

"நீயும் சொந்தச் சித்திதானே. நீயும் வா."

"நான் வரத்தயார். ஆனால் ஒம்ம பொண்டாட்டி. சரியான தாடகையாச்சே. நான் அங்க வந்தால் ஆடமாட்டாள்? ஒமக்கும் அவளத் தட்டிக் கேட்க துப்பு கிடையாது.”

எலி டாக்டர் புரிந்து கொண்டார். புறப்பட்டார். இன்னும் அங்கே இருந்தால் பெண்டாட்டியைப் பற்றி என்னவெல்லாமோ பேசுவாள். 'கடைசில இந்தக் காஞ்சான் பயலவிட நான் கழிவாய் போயிட்டேனே.

தெருக்கதவை நோக்கி நடந்த எலி டாக்டர், காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினார், காஞ்சானை சந்தோஷமாகக் கேட்டார்.

"நீயும் என் மகன் உரக் கடைக்கு வாரதுல சந்தோஷம்."

"நான் அதுக்கு வர்ல. ஒன்னை அனுப்பிட்டு கதவைப் பூட்டுறதுக்கு வந்தேன்."

எலி டாக்டரை அனுப்பிவிட்டு கதவையும் தாழிட்டு விட்டு, மீண்டும் அலங்காளியிடம் வந்த காஞ்சான் பல்லை இளித்தார். அலங்காரி, அவரை, ஏற இறங்கப் பார்த்தாள். 'ஏய் காஞ்சான்! அந்த ஆலமரத்தடி விஷயத்துல என்னை என்னமாப் பேசுனே. மறந்துட்டேன்னா நெனச்சே. தாய் பிள்ளையா இருக்க ஒங்களா நானா கெடுக்கேன்? இரு இரு.

வாழ்க்கையில் மேலும் முன்னேறுவதற்கு ஏற்கனவே முன்னேறிய அனுபவத்தில் ஒவ்வொருவருக்கும் தனக்கு என்று ஒரு வழியமைத்துக் கொள்வார்களே, அதுபோல், அலங்காரியோ தனக்கென்று இருவேறு தனிப்பார்வைகளை வகுத்திருந்தாள். தலையை லேசாய்ச் சாய்த்து உதடுகளை முத்தமிடப் போவதுபோல் குவித்து, தலை முடியைத் தோள் வழியாக மார்பிலே போட்டுக் கொண்டு கண்களை அகலமாக்கி, இப்போதுதான் புதுசாய்ப் பார்ப்பது போலவும் பார்ப்பாள். அப்படிப் பார்த்தால் அது படுக்கையறைப் பார்வை என்று பொருள். இல்லையானால். கழுத்தை முன்னால் நீட்டி கண்களை இடுக்கி, இடுப்பு மேல் கைபோட்டு பார்ப்பாள். இது இளக்காரப் பார்வை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/70&oldid=1243498" இலிருந்து மீள்விக்கப்பட்டது