பக்கம்:சாமியாடிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சு. சமுத்திரம்

72 சு. சமுத்திரம்

"அப்போ. குடுமி வச்சாங்க. இப்போ இருக்கா. அப்போ நாட்டாண்மைன்னு தனி அந்தஸ்து தனிப்பங்கு இருந்துது. இப்போ இருக்கா. பரம்பரை பரம்பரையாய் ஒரு அடிமைப் பழக்கத்த மாத்தப் படாதுன்னு சட்டமா."

"தாயா பிள்ளையா பழகிட்டோம்."

"நாமதான் தாயா பழகுறோம். அவங்க ஒண்னும் பிள்ளையா பழகல. அப்படி நினைச்சா என்னை இப்டி பேசியிருப்பாளா.."

"ஒன் கோபமும் நியாயமும் புரியது. அதோட காளியம்மான் தாய். சுடலை அவளோட பிள்ளை. அம்மாவுக்கு விசேஷம் முதல்ல. நடக்கதுதானே முறை."

'பிள்ளை தலையெடுத்தால் தாய் ஒதுங்கிக்கணும்... இதுவரைக்கும் பையத்தியாரங்களாய் இருந்த செம்பட்டையான் கூட்டம் ஒதுங்கனும்.”

"சரி அவங்ககிட்டே பேசிப் பார்ப்போம். இப்போ உள்ளே வா."

அலங்காரி, இப்போது முதலாவது பார்வையை வீசினாள். தலை முடியை பின்னால் தோள்வழியாய் போட்டு, கண்களை அகலப்படுத்தி, வாயைக் குவித்து, காஞ்சான் தோளிலே செல்லமாக கைபோட்டு, அவர் காதைப் பிடித்துத் திருகியபடியே உபதேசித்தாள்.

"இந்த ஊர்ல அவங்க குடும்பந்தே உசத்தின்னு அந்த கரும் பட்டையான் பயலுவளுக்கு ஒரு நெனப்பு. வரப்போற பஞ்சாயத்து தேர்தல்லகூட பழனிச்சாமி தான் தலைவருன்னு இப்பவே பேசுறாங்க. நாம் நம்ம துளசிங்கத்தையும் யோசிச்சுப் பாருங்கன்னு சொல்றதுக்குக்கூட வக்கில்லாம இருக்கோம். ஊர்ல குளத்து மீன் பங்காகட்டும், வழக்கு வம்பு விவகாரமாகட்டும், கரும்பட்டையான் குடும்பம்தான் முன்னால நிக்குது. அதுவும் நெஞ்ச நிமிர்த்தி நிகருல்லன்னு நெனப்புல. இதுக்குல்லாம் காரணம் அவங்க குலதெய்வத்துக்கு முதல்ல அம்மன் கொடை கொடுக்கிறதாலதான் நாமே நம்ம தெய்வத்தை பின்னால நினைக்கதாலதான் இப்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/74&oldid=1243504" இலிருந்து மீள்விக்கப்பட்டது