பக்கம்:சாமியாடிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

73

சாமியாடிகள் 73

கிடக்கோம். இந்த வழக்கத்தை மாத்துனாத்தான் அவங்க திமிறு அடங்கும். காஞ்சான் பயல நீ வச்சுக்கிட்டு இருக்கது எனக்குத் தெரியாதாடி'ன்னு பேச்சி என்னப் பார்த்து ஒரு பேச்சுப் பேசிட்டாள். நீரு பயலாம். அதுவும் காஞ்சான் பயலாம். சுப்பிரமணியன்னு நெசப் பேரச் சொல்லுறது? பயலாம். காஞ்சான் பயலாம்."

"நீ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குது. அந்தப் பயலுவளும் நம்மள தெம்மாடின்னுதான் நெனக்காங்க. இல்லாட்டா இந்தக் குடும்பத்துக்கே பெரிய மனுஷனான என்னை அப்படி பேசியிருக்கமாட்டாள். சரி. இப்போ என்ன செய்யணுமுன்னு சொல்லுதே...?

"விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னு என் புருஷன் கேணையன் கேள்வி கேட்டது மாதிரி இருக்கு- இந்த ஆடி மாத முதல் வெள்ளில நம்ம மாடனுக்கு கொடை கொடுக்கணும். என்ன சொல்லுதீரு."

பரம்பர பழக்கத்தை மாத்தப்படாதுன்னு கரும்பட்டையான் பயலுவ தகராறுக்கு வந்தால்."

"இதோ என் கையில பத்து வளையல் கிடக்குது. நம்ம குடும்பத்து பொம்பிளய கிட்ட போனால் நூறு வளையல் சேரும். செம்பட்டையான் ஒவ்வொருத்தனும் இதைப் போட்டுக்கங்க... வேட்டியைத் தூக்கி முந்தானையாப் போட்டுக்கங்க.."

“சரிப்பா. அவங்க அம்மனுக்கு முதல் வெள்ளில கொடை கொடுத்தாலும் நம்ம மாடனுக்கும் முதல் வெள்ளிய கொடை. நீ உள்ளே வா."

"சவடால் பேச்சில இருக்கப்படாது. இது நீரு மட்டும் செய்யுற காரியமில்ல. ஆடி பிறக்க இன்னும் பதினைந்து நாள்தான் இருக்குது. இப்பவே போய் நம்ம குடும்பத்து ஆட்கள முடிச்சுட்டு வாரும். அப்படி முடிச்சிட்டியரு. எலி டாக்டர, கிட்டவே சேக்கமாட்டேன். இல்லாட்டா வேற மாதிரி. சரி புறப்படும். இந்தக் கிணத்துத் தண்ணி இங்கதான் இருக்கும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/75&oldid=1243505" இலிருந்து மீள்விக்கப்பட்டது