பக்கம்:சாமியாடிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

சு. சமுத்திரம்

80 சு. சமுத்திரம்

"ரெயிலுக்கு நேரம் இருந்தாலும் திருமலை இங்க வாரதுக்கு அதிக நேரம் இல்ல. 'என் வயலுக்குள்ள ஒனக்கென்னடா வேலை. என் தங்கச்சி நிற்கான்னு தானே போனேன்னு வம்புக்கு வருவான்."

"ஒன்னை மாதிரி அவனும் முன்கோபி. ஒன்னை மாதிரி அவனும் நல்லவன். சரி. சரி. குங்குமத்த தா."

"நான் மட்டும் வச்சிக்கிட்டா எப்படி..? அவளுக்கும் கொடு. நீயே அவள் நெற்றில வைடா..."

"ஒனக்கு வேற வேல இல்ல. வேற வினயே வேண்டாம்."

"நாலு நாடு சுத்தியும் கடைசில ஒன் சட்டாம்பட்டி புத்தி ஒன்னவிட்டுப் போக மாட்டேங்கே கொளுந்தியா நெற்றியில குங்குமம் வச்சால் என்ன தப்பு. ஒன்னைவிட வயசுல சின்னவள். அவள் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும். அவளை வாழ்த்துற மாதிரிதான் உன்னை வைக்கச் சொல்லுதேன்."

துளசிங்கம் கோலவடிவைப் ஏறிட்டுப் பார்த்தான். அவளோ, தரையில் பெருவிரலை வைத்துக் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

எப்படிப்பட்ட பாட்டாக இருந்தாலும், அது சினிமாப் பாட்டாக வந்துவிட்டால் போதும் என்று நினைக்கும் கவிஞனைப் போல, பிரசுரமாவதாய் இருந்தால் எவ்வளவு மோசமாகவும் எழுதத் தயாராகும் எழுத்தாளியைப் போல, அலங்காரி தான் நடத்த நினைத்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் தன்னைத்தானே பிரமிப்பாய் பார்த்தபடி, பெருமிதமாய் நின்றாள். இப்போது அவளுக்குக் கோல வடிவு, துளசிங்கம், பேச்சியம்மா, முதலிய ஆட்களைப் பற்றிய எண்ணமே இல்லை. ஒரு மொழியின் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அவற்றை மனதுக்குள் சேகரித்து விட்டு மறந்து விடுவோமே, அப்படி ஆண்டவன் எழுதும் தலையெழுத்துப் போல், தானும் தன்னாலேயே அழிக்க முடியாத ஒரு எழுத்தைத் தலையெழுத்துக்கு மேல், தலையாய எழுத்தால் எழுத முடியும் என்ற பெருமிதத்தில் கோலவடிவை உற்றுப் பார்த்தாள். அன்று ஆலமரத்தடியில் அவள் எதிர்த்துப் பேசியதுபோல், ஒருவேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/82&oldid=1243512" இலிருந்து மீள்விக்கப்பட்டது