பக்கம்:சாமியாடிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

79

சாமியாடிகள் 79

அவற்றை வாங்கி மீண்டும் தண்ணிரில் நனைத்துப் பிழிந்தாள். அவற்றைத் தோளில் போட்டபடியே, ஒவ்வொன்றாய் எடுத்து உதறினாள். அப்போது குளத்துக் கரையைப் பார்த்து விட்டாள்.

"எப்பாவு. துளசிங்கம். இங்க வாடா..." "நீ வாட உடனே வா." "எப்பவுமே அவசரம். இங்க வாடா..."

கோலவடிவுக்கு அத்தையின் குரல் வலுத்தும், துளசிங்கம் குரல் சிறுத்தும் கேட்டன. வேறொரு சமயமாக இருந்தால், "ஆம்புள இங்கே எதுக்கு என்றிருப்பாள். இப்போது ஒருவேளை அக்னி ராசாவுக்குக் கழுத்தை நீட்ட வேண்டியதிருக்குமோ என்று கழுத்தோடு சேர்த்துத் தலை சுழல நின்ற கோலவடிவு, அப்படியும் பேசவில்லை, இப்படியும் பேசவில்லை.

துளசிங்கம் உருண்டோடி வருவதுபோல் ஓடோடி வந்தான். அவளருகே வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றபடியே, ஒரு வரியின் கால்புள்ளி, அரைப்புள்ளி மாதிரி மூச்சு வாங்கிப் பேசப் போனான். வழக்கம் போல் அலங்காரி, முந்திப் பேசினாள்.

"ஒன்ன நான்தான் கடிச்சு தின்னுவனா. இல்ல. இந்தக் கோலவடிவுதான் கடிச்சுத் தின்னுடுவாளா... ஏண்டா இப்டி வரமாட்டேன்னே."

"தலைக்கு மேல ஆயிரம் வேலை இருக்குது. இப்பவே மெட்ராஸ் போறேன். சிமெண்ட் கம்பெனி ஏஜெண்ட்களோட கூட்டம் நடக்குது. ஒன்கிட்ட சொல்லாமப் போக முடியுமா.. அதுக்கு வரதுக்கு பத்து நாளு ஆகும். ஒன் வீட்டுக்குப் போனேன். நீ குளிக்கிற மதகுக்கு வந்தேன். சித்தியப் பார்க்காமல் போகப் போறேமேன்னு கவலையோட கரையில நடந்தால் ஒன் குரல் கேட்குது. இதோ சிமெண்ட் கடையில சாமி கும்பிட்ட குங்குமம். சீக்கிரமா. வாங்கு. நேரமில்ல."

"ரெயிலுக்குத்தான் இன்னும் நேரமிருக்கே. ஏன் இப்டி பட்டையில போட்ட நண்டு மாதிரி துடிக்கே..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/81&oldid=1243511" இலிருந்து மீள்விக்கப்பட்டது