பக்கம்:சாமியாடிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சு. சமுத்திரம்

78 சு. சமுத்திரம்

"எங்க துளசிங்கத்தைப் பாக்க பயம் வருமோ."

“சீ.. அப்டில்லாம் இல்ல. எத்த. இந்த கல்யாணப் பேச்சப் பற்றி கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க... எனக்குப் பயமா இருக்கு. நல்லவன் என்கிற ஒரே காரணத்துக்காவ அப்பா அவனை என் தலையில கட்டப்படாது."

"ஒன் நிலம எனக்குப் புரியதும்மா. பொண்டாட்டிகிட்ட ஒருத்தர் ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கப்படாது. போக்கிரியா இருக்கணும். போக்கிரின்னு அத்தை எந்த அர்த்தத்துல சொல்லுதேன்னு புரியுதா. அடடே. வெட்கத்தப் பாரு. நீ புத்திசாலி. நான்தான் முட்டாள். ஏமாந்துட்டேன் ஒரேயடியாய்."

"யார்கிட்டே."

"வேறு யார் கிட்டே என் புருஷன் கிட்டதான். வெட்டாம்பட்டில விளையாட்டுத்தனமா திரிஞ்சு கடைசில. வினையாயிட்டேன். கட்டிக்க வந்த வெளியூர் பயலுகள உள்ளூர் பயலுவ கலச்சி விட்டுட்டாங்க.. கடைசில எங்கம்மா, 'இவள் கல்யாணமாவாமலே கிழவியாய் ஆயிடுவா போலிருக்கே... குருடோ, செவிடோ. நொண்டியோ, முடமோ எவனயாவது ஒருத்தன இழுத்துட்டு ஒடிப்போனாக்கூட சந்தோஷப்படுவே'ன்னு என் காதுபடவே இன்னொரு கிழவிகிட்டச் சொன்னாள். அந்தச் சமயம் பார்த்து இந்த ஆணுல அழகு மன்னன் அர்ச்சுன ராசதுரை. அதான் என் வீட்டுப் பேக்கன் கத்தரிக்காய் விற்க வந்தாரு ஒனக்கு அக்னி ராசா எப்டித் தெரியுதோ அப்டித்தான் இந்த சீமையிலேயே இல்லாத சாமி. எனக்கு பாவமாகத் தெரிஞ்சது. சும்மா சொல்லப்படாது. என்னை சைக்கிள்ல தூக்கிட்டு வந்த அளவுக்கு நல்ல மனுஷன்தான். ஆனால் கட்டிக் காக்கத் தெரியாத தெம்மாடி. சரியான டப்பா. பாவம் பாத்து பாவப்பட்டேன். பாவியாவே ஆயிட்டேன். எனக்கு வந்த நிலம ஒனக்கு வரப்படாது."

கோலவடிவிற்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கையில் மடித்து வைத்த துணிகள் கீழே விழுந்து மண்ணை அப்பின. அலங்காரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/80&oldid=1243510" இலிருந்து மீள்விக்கப்பட்டது