பக்கம்:சாமியாடிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

77

சாமியாடிகள் 77

"ஒன்னை அக்கினி ராசாவுக்கு கட்டி வைக்கறதா. ஒரு பேச்சு. அடிபடுது. அவங்களே ஒன்னைத் தரச் சொல்லி கேட்டாங்களாம்."

"அய்யய்யோ.. எங்கப்பா சம்மதிக்க மாட்டாரு... அவரு சம்மதிச்சாலும், நான் சம்மதிக்க மாட்டேன்."

"என்ன கோலம். அலங்கோலமாய் பேகற. நீதான் அவனை நல்லவன்னு சொன்னே. கெட்ட பழக்கம் இல்லாதவன்னு சொன்னே.”

“நல்லவங்களா இருக்கிறவங்களை எல்லாம் ஒருத்தி விரும்பணுமுன்னு இல்ல. கெட்ட பழக்கம் இல்லாமல் இருக்கதுல சந்தோஷந்தான். ஆனால் அதுவே நல்ல பழக்கமா ஆயிடாது."

"அப்போ நல்ல பழக்கமுன்னா எதுதான்."

"நாலுபேர் கிட்ட கலகலப்பா பேசணும். அதுவோ வெத்துப் பேச்சாவப்படாது. சிரிக்கச் சிளிக்கப் பேசனும். அதேசமயம் சிரிப்பாய் சிரிக்கும்படியாய் உளறப்படாது. கிண்டலா பேசணும். அதுவே இளக்காரமா ஆயிடப்படாது. நாலு நாடு சுத்தியிருக்கணும். அதேசமயம் நம்ம ஊர மறக்கவும் படாது. வம்புச் சண்டைக்குப் போகாத சாதுவா இருக்கணும். அதேசமயம் வந்த சண்டைக்கும் பயந்து போகாத வீரம் இருக்கணும். மினுக்கி மினுக்கி உடுக்கவும் படாது. அதேசமயம் உடம்புல ஒண்ணுமே இல்லாதது மாதிரி இந்த அக்னி ராசா போல வேட்டிய தார்ப்பாச்சு காய்ப்பு பிடிச்ச முட்டுக் காலுகள காட்டப்படாது. நல்லவனா இருக்கணும். ஆனால் அப்பாவியாய் இருக்கப்படாது."

"எம்மாடி, என்னமா பேசுறே. நான் ஒன்ன ஊமைன்னு நெனச்சேன். ஒன் நெஞ்சில இத்தனை சங்கதியளும் இருக்கு துன்னு யாருக்கும் தெரியாது. நீ சொல்ற தகுதியெல்லாம் எங்க மச்சான் மகன் துளசிங்கத்துட்டதான் இருக்குது."

"நான் யாரையும் குறிப்பாச் சொல்லல. ஒருத்தரைப் பார்க்கும் போது அப்படிப் பார்த்தவங்க மனசுல பயத்தையும் தரப்படாது. பாவமா இருக்கேன்னு பாக்கவங்க நினைக்கறது மாதிரியும் இருக்கப்படாது. அக்னி ராசாவப் பார்க்கும்போது பாவமாத்தான் தெரியும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/79&oldid=1243509" இலிருந்து மீள்விக்கப்பட்டது