பக்கம்:சாமியாடிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

85

சாமியாடிகள் 85

தங்கி நின்ற நீரில், அவள் முகம் தெரிந்தது. குங்குமத்தோடு. இடையிடையே வட்ட வட்ட சின்னச் சின்ன கண்ணாடி பதிச்ச புடவ அதை வாங்கணும். கோணச்சத்திரத்துல கிடைக்காதே. மெட்ராஸ்ல துளசிங்கம் மச்சானை வாங்கி. அடியே கோலம். ஒனக்கு கொழுப்பு ஜாஸ்திடி.

"நாம போவோமா ராசாத்தி. ஒன் மச்சான் வச்ச குங்குமம் ஒனக்கு எப்டி ஜொலிக்குது தெரியுமா. யாரு கிட்டயும் விளையாட்டுப் போல சொல்லிடமாட்டியே. அடி என் மல்லிகப்பூவே. ஒன்னப்பத்தி எனக்குத் தெரியாதா. ஆனாலும் சும்மா கேட்டேன்."

கோலவடிவும், அலங்காரியும் இணைந்து நடந்தார்கள். வாய்க்கால் வரப்பிற்கு வந்தபோது, ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். கோலம் கண்ணில் படர்ந்த முடியை ஒதுக்கினாள். பிறகு பயந்தவள் போல், ஒதுக்கிய கரத்தை உற்றுப் பார்த்தாள். அங்குமிங்குமாய் ஆட்டிப் பார்த்தாள் கையில் குங்குமம் தெரியல. முடியை ஒதுக்குற வேகத்துல நல்ல வேள கையி குங்குமத்துக் கிட்ட போகல. ஒருவேளை மேல் பக்கமா உச்சந்தலைக்குப் போய் இருக்குமோ. இருக்காது. இருக்காது. எப்படிப்பட்ட குங்குமம் இது. அய்யய்யோ... அவரு வச்சார்னு சொல்லல. கலப்புல்லாத குங்குமமுன்னு சொல்ல வந்தேன். அவ்வளவுதான். அவ்வளவேதான்.

இருவரும் கரையில் ஏறினார்கள். காற்றில், கோலவடிவின் தலைமுடி, சரியாக நெற்றியில், அந்தக் குங்குமப் பொட்டின் மேல் விழுந்தது. முடியைத் தொட்டால் குங்குமம் போயிடும். தொடாட்டா ஒருவேள முடியே கலச்சிடப்படாதே. அத்தை கிட்டே சொல்லி அந்த முடிய பதமா எடுக்கச் சொல்லுவோமா. சீ. தப்பு. தப்பில்ல. சரிதான். ஆனால் அத்தை தப்பா நினைக்கப்படாது. குங்குமத்துக்கே இப்படி குதிக்காளேன்னு நெனச்சிடப்படாது.

கோலவடிவு, குங்குமமாய்ச் சிரித்தபடி, அலங்காரிக்கு இணையாக நடந்தவள், சற்றே பின்னடைந்தாள், தலையை அங்குமிங்குமாய் ஆட்டி, நெற்றியில் பட்ட முடியை தலைக்குக் கொண்டு போக சர்க்கஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/87&oldid=1243517" இலிருந்து மீள்விக்கப்பட்டது