பக்கம்:சாமியாடிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

சு. சமுத்திரம்

86 சு. சமுத்திரம்

செய்து பார்த்தாள். இதனால், மேலும் ஒரு கற்றைத் தலைமுடி நெற்றியில் வந்து விழுந்ததுதான் மிச்சம். இணையாக நடந்து கோலவடிவு, எங்கே என்பது போல அலங்காளி திரும்பிப் பார்த்தாள். அவளையும் பார்த்தாள். அவளுக்குப் பின்னால் அக்னி ராசாவின் தந்தை ராமையாவையும் பார்த்தாள். பின்னர் நின்ற இடத்தில் நின்றபடியே பேசினாள்.

"கோலம். அதோ ஒன்னக் கட்டிக்கப் போறதா பேச்சு அடிபடுற அக்கினி ராசாவோட அப்பா ராமையா வாராரு நான் நைஸாாப் பேசி. ஊசாட்டம் பாக்கேன். நீ வீட்டுக்குப் போ."

"அத்த கல்யாணம் நடக்கப்படாது."

"அத்தை எதுக்கு இருக்கேன். நீ தைரியமாய் வீட்டுக்குப் போ..."

கோலவடிவு முன்னேறினாள். காலில் முள்பட்டிருப்பது போல், ஒரு காலைத் தூக்க முடியாமல் தூக்கி அதை இடுப்போடு சேர்த்து இணைத்தபடியே நின்ற அலங்காரி, ராமையா வந்ததும் காலைக் கிழே போட்டாள். கூனையைத் தலையில் சுமந்து, அகத்திக் கீரையைக் கையில் பிடித்தபடியே வந்த ராமையாவிடம் பேச்சுக் கொடுத்தாள். இந்த ராமையா மச்சான் யாருடனும் பேச மாட்டார். பெண்ணென்றால் காத தூரம் ஒடுவார். ஆனால் அவருக்கும் இந்த அலங்காளியிடம் ஒரு சின்னச் சபலம்.

"வயலுக்கு போயிட்டா வாரீரு மச்சான்."

"பாத்தா எப்டிப் பிள்ள தெரியுது."

"மைனர் மாதிரி தெரியுது. போவட்டும். என் மகன் அக்கினி ராசாவுக்கு எப்போ கல்யாணத்த வைக்கப் போlரு."

"இந்த ஆவணில முடிச்சுடனும். ஏதாவது துப்பு இருந்தா சொல்லு."

"இடுப்புல புள்ளய வச்சுட்டு எங்கெல்லாமோ தேடுனாளாம். பழனிச்சாமி அண்ணாச்சி மகள் கோலவடிவு எதுக்கு இருக்காள்..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/88&oldid=1243518" இலிருந்து மீள்விக்கப்பட்டது