பக்கம்:சாமியாடிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

87


"ஆமாம். அதுவும் நல்ல யோசனைதான். ஆனால் அவள் பத்து படிச்சியிருக்காள். இந்தப் பயமவனுக்கு கையெழுத்துப் போடவே வராது.”

"வாராண்டாம். எதுக்கு வரணும். இந்தக் காலத்துல பொம்புள எண்ணிக்க கூடிப்போச்சு. அதனால காலேஜ் படிச்ச பொண்ணு கூட கார் டிரைவர கட்டுறாள். சாண் பிள்ள ஆனாலும். ஆண்பிள்ள ஆண்பிள்ளதான். ஒங்க குடும்பம் பெரிய குடும்பம். கோலவடிவுதான் அதக் கட்டிக் காப்பாத்த முடியும்."

"இந்த நெனப்பு எனக்கு வராமப் போயிட்டு பாரு. இனிமேல் என் மகன் அக்னிராசா தான் மாப்பிள்ள. கோலவடிவுதான் பொண்ணு."

அலங்காரி அதை ஆமோதிப்பவள் போல் இப்போதும் குலவையிட்டாள் - செத்த வீட்டில் சங்கு ஊதுவது மாதிரி.



7


அதே ஆலமர அடிவாரம்

சூரியன் வெளியே உள்ளவர்களைச் சுடப்போவது போல் பார்த்தாலும், அந்த மரத்தடிப் பெண்களை, கிளைகளுக்குள்ளும், இலை தழைகளுக்குள்ளும் மறைந்திருந்து சுகமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாப் பெண்களும், மத்தியில் ஒரு ரேடியோ டிரான்ஸிஸ்டரை வைத்து மச்சானைப் பாத்தீங்களா'வை ரசித்துக் கேட்டுக் கொண்டிந்தார்கள். அந்தப் பாடலுக்கு ஏற்ப, பட்டும் படாமலும், இருந்த இடத்தில் இருந்தபடியே ஆடினார்கள். அந்த

பாட்டோடு பாட்டாய்ப் பாடி, தங்கள் குரலைவிடப் பாடியவள் குரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/89&oldid=1243524" இலிருந்து மீள்விக்கப்பட்டது