பக்கம்:சாமியாடிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

91

"பெத்தட்டி அக்னி ராசாவோடு சேர்த்துப் பார்க்க முடியவில்லை. அதை விட அக்காவை வெட்டிப் போட்டுடலாம். அதோடு அக்கினி ராசாவுக்குக் கோலவடிவு போயிட்டால், அந்த அக்கினிய விட மோசமான அவன் தம்பி 'பல்லனுக்கு என்னைக்கூட கட்டி குடுக்கலாமே. இந்தப் பேச்சு இருக்கோ இல்லியோ. இருக்கப் படாது. பெரியப்பா சம்மதிக்கவே மாட்டார். ஒரு வேள ராமய்யா மாமாவுக்கு அப்டி ஒரு ஆச இருக்கும். இந்த அக்கினி ராசாவுக்குத்தான்.ஆச கீசன்னு எதுவுமே கிடையாதே.

சந்திரா, பதிலளிப்பது மாதிரியல்ல, பதிலடிப்பது போல் பேசினாள்.

"ஆலம்பழத்த அண்டங்காக்கா கொத்தவிட மாட்டோம். படியாத முட்டாளுக்கு படிச்சவள குடுப்பமாக்கும். போயும் போயும் அக்கினி ராசா. கோலவடிவுக்கா?. எங்க அக்கா மலைன்னா. அவரு மடு. வெத்துப் பேச்சு பேசாதிய. எங்கக்கா கால்தூசிக்கு அக்கினி ராசா பெறமாட்டார்."

அந்தப் பெண் கும்பலில் மேலத் தெருவைச் சேர்ந்த அக்கினி ராசாவின் சொக்காரப் பெண்கள் இருந்தார்கள். அந்த ராசாவைப் பற்றி அவள் சொன்னது சரிதான் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள், அங்கே விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை.

"எங்க அக்கினி ராசா கால்துசிக்கு ஒங்க கோலவடிவு பெற மாட்டாள். கம்மா ஒனக்குத்தான் பேசத் தெரியுமுன்னு பேசாதே. எனக்கும் பேசத் தெரியும்.ஒங்க பெரியப்பா மகன் திருமலை என் கால்துசிக்கு பெறமாட்டான்."

"சரி. சரி. யாரையும் யாரும் கழிச்சுப் பேசப்படாது. ஒவ்வொருத் தரும் அவரோடு அப்பன் அம்மாவுக்க பிறந்தது மாதிரி இருப்பாவ..."

மேல ஊரும் கீழ ஊரும் மோதிக் கொண்டு கிளிகள் போல கத்தியபோது அலங்காரி மகிழ்ந்து போனாள். ஆக, அக்கினிராசா, கோலவடிவு கல்யாணப் பேச்சு சம்பந்தப்பட்ட குடும்பங்களில் அடிபடுதோ இல்லையோ சந்திக்கு வந்துவிட்டது. இந்தப் பெண்களே இந்தச் சேதியைத் தெருத்தெருவாய், வீடு வீடாய், ஆள் ஆளாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/93&oldid=1243532" இலிருந்து மீள்விக்கப்பட்டது