பக்கம்:சாமியாடிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சு. சமுத்திரம்

பரப்பி விடுவார்கள். இந்த முட்டாப்பய மவள் லீலாவதி இதுக்குமேல எதுக்கு இருக்காள். அதுவும் கழிவு பீடியாய் சுத்துக்கிட்டு. சந்திராவால் தாள முடியவில்லை. மீண்டும் எகிறினாள்.

"எங்கண்ணாச்சிய சொன்ன ஒன் வாய."

"நிறுத்துங்கழா. நிறுத்துங்க... இனிமேல் எது பேசினாலும் வெறும் பேச்சுத்தான். பேசணும். நம்ம துளசிங்கம் தம்பி வந்தாலாவது அவன் வாயைக் கிளறி. கமலகாசன். சரிகாவ பண்ணிக்கிட்டது. கார்த்திக் ரீபிரியாவை கைவிட்டது. இந்த மாதிரி முக்கியமான விஷயங்களைப் பேசலாம். இத விட்டுட்டு வெட்டிப் பேச்சா பேசி அடிதடி வரும்போலுக்கு."

அந்தப் பெண்கள் மத்தியில் இருந்தாலும், எங்கேயோ இருப்பதுபோல் இருந்த ரஞ்சிதம், பீடி சுத்துவதை நிறுத்திவிட்டு, உரக்கப் பேசினாள்.

"சினிமாக்காரங்களப் பத்தியும், சினிமாக்களப் பத்தியும் பேசிப் பேசியே நம்ம வாழ்க்க சினிமாவாப் போச்சு. சினிமாவே வாழ்க்கையாச்சு. நம்மை மாதிரி ஏமாளிவ இருக்கதாலதான் அவங்களோட அற்ப விஷயங்களை பெரிசா எழுதி நம்மளயும் பேச வைக்கானுவ... அவனுகளுக்காவது காசு கிடைக்குது. நமக்குத் தான் சினிமாக்காரங்களை பேசிப் பேசி உள்ளூர் பிரச்சினை மறந்து போச்சு.. சதா சினிமாக்காரனயும், சினிமாக் காரியயும் நெனச்சு நெனச்சு நம்ம ஊரில நடக்கிற அக்கிரமம் அநியாயத்தை பேசக்கூட மாட்டக்கோம்."

"அப்படி என்ன பெரிசா அக்கிரமம் நடக்கு."

"இதைக்கூட சொல்லிக் காட்ட வேண்டியதிருக்கு. முந்தா நாள் ஐயங்கண்ணு பெரியவர். அவரு மகனும் மருமவளும் செருப்ப வச்சே அடிச்சாங்க. தட்டிக் கேட்டமா..? மலையப்புரத்தா பாட்டிய அவன் மகன் பட்டினி போடுறான். கேட்டோமோ. மாட்டோம். நமக்கு சினிமா நடிகை காதல் தோல்வி முக்கியம். பாவம். இந்த ஐயங்கண்ணு தாத்தா செருப்பால அடிபட்டா என்ன. பெருக்கு மாறால அடிபட்டா என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/94&oldid=1243533" இலிருந்து மீள்விக்கப்பட்டது