சாயங்கால மேகங்கள்
113
போயிருந்தான். எல்லாரும் அவரவர்களுடைய யோசனைகளைச் சொன்னார்கள்.
பூமிக்கு மிகவும் வேண்டிய நண்பன் ஒருவன் நாலைந்து பேர்களை ஒருவனாக எதிர்த்து நின்று சமாளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆட்டோ டாக்ஸி டிரைவரும் கராத்தே ஜூடோ, குங்ஃபூ ஆகிய நவீன தற்காப்புப் போர்முறைகளைக் கற்றாக வேண்டும் என்றும், அதற்குப் பூமி உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினான். அந்த யோசனை எல்லாராலும் கரகோஷம் செய்து வரவேற்கப்பட்டது. குறிப்பாக இளம்வயது டிரைவர்கள் அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றார்கள்.
“இந்த யோசனையை ஏற்கனவே என் நண்பர்களான டிரைவர்கள் சில பேருக்கு நானே தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறேன். டாக்ஸி-ஆட்டோ டிரைவர்கள் சவாரி செய்பவர்களிடம் பணம் பறிக்கிறார்கள் என்ற பழைய மாமூலான புகார் மறைந்து சவாரி செய்பவர்கள் தந்திரமாக டாக்ஸி ஆட்டோ டிரைவர்களை மறைவான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களைத் தட்டிப் பணம் பறிப்பது ஆரம்பமாகியிருக்கிறது. வலுச் சண்டைக்குப் போகக் கூடாது? வந்த சண்டையை விடவும் கூடாது. தற்காப்பு என்பது மிகமிக அவசியமானது. தற்காப்பு ஏற்பாடு செய்து கொள்ளாமல் இனிமேல் இந்தத் தொழிலில் காலந் தள்ள முடியாது” என்று பூமியும் அந்த யோசனையை ஆதரித்தான்.
அதன் விளைவாகக் காலையிலும் மாலையிலும் டாக்ஸி-ஆட்டோ தொழிலாளர்கள் சிலருக்கு அந்த வட்டாரத்தில் அவர்களே தேர்தெடுத்திருந்த ஒரு மெக்கானிக் ஷெட்டின் பின்புறமுள்ள பகுதியில் பூமி கராத்தே கற்றுத் தர வேண்டியதாயிற்று.
பூமியின் வேலைக்கு இடையூறு இல்லாமல் மெஸ்ஸிலேயே ஒரு மூலையில் கற்றுத் தருமாறுதான் அவர்கள் கூறினார்கள். மெஸ்ஸில் அவ்வளவு இடமில்லாததால் பூமிதான் அவர்களை வேறு இடம் பார்க்குமாறு சொல்லியிருந்தான். மெஸ் அதற்குச் சரியான இடமில்லை என்பது அவன் கருத்தா-