உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

127

"அது சாத்திய மில்லை! இந்தப் பையன் கொஞ்சம் முற்றிய கேஸ்! சாதுரியமாக வழிக்குக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் காரியம் கெட்டுப்போகும். முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.”

“என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள் நீங்கள்?” என்று தேவகியும் சித்ராவும் பூமியைக் கேட்டார்கள்.

பூமி கல்லூரியில் தனக்கும் குமரகுருவுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லி விவரித்தான்.

“நீங்கள் இருவரும் அந்தப் பெண்ணைக் கொஞ்சம் தந்திரமாக நடந்துகொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்தால் அவனுக்குப் பாடம் கற்பித்துவிடலாம்.”

“தந்திரமாக நடந்துகொள்வது என்றால் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

“அவனோடு பேசி அவனைத் தானே ஒரு பூங்காவுக்கு வரச் சொல்லி அவள் அழைக்கவேண்டும். அவனுக்குச் சந்தேகம் எதுவும் ஏற்படாதபடி மிகவும் கவனமாகக் கூப்பிட் வேண்டும்.”

“இது மிகவும் சிரமம். அந்தப் பெண்ணும் அவளுடைய அம்மாவும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். என்னவோ ஏதோ என்று சந்தேகப்படுவார்கள்.”

“சந்தேகப்பட்டுப் பயனில்லை! முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.”

“அவங்க ரொம்ப கெளரவமான குடும்பம். மத்தவங்களை ஏறெடுத்துப் பார்க்கவே பயப்படுவாங்க, தப்பா ஒண்ணை நடிக்கிறதுக்குக்கூடக் கூச்சப்படுவாங்க.”

“அநாவசியமான பயம், அநாவசியமான கூச்சம் எல்லாம் இந்தத் தலைமுறைக்கு ஒரு சிறிதும் ஆகாத குணங்கள். அனுவளவு கூச்சமும் பயமும்கூட இல்லாமல் சமூக