சாயங்கால மேகங்கள்
155
தில் சிக்க வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சுயநலமான தற்காப்பு உணர்ச்சிதான் காரணமாயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுயநலமான தற்காப்பு உணர்ச்சியால்தான் பட்டினத்தில் பலர் மரத்துப் போயிருந்தார்கள். இப்படி மாத்துப் போவதைப் பூமி அறவே வெறுத்தான். இதற்கும் ஆண்மையற்ற பேடியாக மாறுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பது அவன் கருத்தாயிருந்தது.
கொடி போல் அவர்கள் கையில் சிக்கிக் கசங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை விடுவிக்க வந்த பூமியின் மேல் கத்தி யோடு பாய்ந்தான் ஒரு முரடன். இன்னொருவன் கையில் பிளேடுடன் பூமியைக் கீறி விட முயன்றான்.
பூமி அவர்களை அருகில் நெருங்காமலே கால் பாதங்களால் தாக்கி நிராயுதபாணிகளாக்கினான். பிளேடும் கத்தியும் மணலில் போன மூலை தெரியவில்லை. முதலில் ‘ஒல்லியாக யாரோ ஓர் ஆள்தானே?’ - என்று பூமியை அலட்சியமாக நினைத்த அந்த முரடர்கள் கராத்தே அடி வாங்கியதும் திரும்பிப் பாராமலே ஓட்டம் பிடித்தனர். சிறிது தொலைவு பின்பற்றித் துரத்திக்கூடப் பூமி அவர்களைத் தாக்கினான்.
இதற்குள் அபாயத்துக்குள்ளான அந்த இளம் பெண்ணை ஆசுவாசப் படுத்திப் பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தருகே வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்றாள் சித்ரா.
அந்தப் பெண் ஒன்றுமே பேசாமல் விசும்பி விசும்பி அழுதாள். பூமியும் திரும்பு வந்த பின் அவளை அழைத்துச் சென்று மணலில் உட்காரச் செய்து தாகத்துக்கு அவர்கள் ஒரு சோடாவும் வாங்கிக் கொடுத்தார்கள்.
பேச ஆரம்பித்தாலே அழுகை வந்தது அவளுக்கு. நீண்ட நேர முயற்சிக்குப் பின் பூமிக்கும் சித்ராவுக்கும் அவளிடமிருந்து பின் வரும் விவரங்கள் தெரிய வந்தன.
அந்தப் பெண் திருவல்லிக்கேணியில் ஒரு மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பெயர் சாவித்திரி. குயின்