பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

203

மானித்தே வைத்திருந்தான். சுயநலம் எதுவுமில்லாத அவன் அதன் காரணமாகவே நிர்ப்பயமாக இருந்தான். இழப்பதற்கு எதுவுமில்லாத துணிவில்தான் அவன் நிமிர்ந்து நின்றான்.

கச்சேரி ரோடு போலீஸ் நிலைய முகப்பில் டாக்ஸியை நிறுத்தி மீட்டரைப் பார்த்து அவன் கணக்குத் தீர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த மோட்டார் சைக் கிளிலே பின்தொடர்ந்தவர்கள் அதைப் பார்த்துக் கொண்டே நேர்கிழக்கே சாந்தோம் ஹைரோட்டை நோக்கி விரைந்தனர். பூமியும் அவர்களைக் கவனித்தான். அவர்களும் அவனைக் கவனித்தார்கள், தான் அபாயங்களில் வலுவிலே போய்ச் சிக்கிக்கொள்கிறோம் என்பது பூமிக்குப் புரிந்துதான் இருந்தது. அதற்காக அவுன் கலங்கவோ, பயப்படவோ இல்லை. மற்றவர்கள் சேதப்படாமல் தடுக்க யாராவது ஒருவர் முதலில் தைரியமாக முன் சென்று சேதம் பட்டுத்தானே ஆகவேண்டும் என்று துணிந்திருந்தான் அவன்.


34

எல்லோருமே திருடர்களாகப் பிறப்பதில்லை. சிலர் சமூக நிர்ப்பந்தங்களால் திருடர்கள் ஆக்கப்படுகிறார்கள். வேறு சிலர் சொந்த நிர்ப்பந்தங்களால் திருடர்களாகிறார்கள்.


ன்னாருவின் ‘மாஃபியாவை’ உடைக்கும் முயற்சி. எதிர் பார்த்ததைவிடப் பயங்கரமாக இருந்தது, பூமியே இப்போது அதை உணர்ந்தான். மின்சாரத் தடை ஏற்பட்ட சமயத்தில் ஹோட்டல் கேஷில் பணம் திருடி விட்டு அகப்பட்ட மாணவன்