உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயஙகால மேகங்கள்

247

அவளோ, “என் பையனைக் கண்டு பிடிச்சுத் தேடிக்குடுங்க” என்று அழுது புலம்பத் தொடங்கினாள்.

முத்தக்காளை உதறியதுபோல் இந்தக் கிழவியை உதறப் பூமி துணியவில்லை. அவளே தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்த மகாபலிபுரம் டீக்கடை டில்லி பாபுவின் முகவரியிலிருந்து தெரிந்து கொண்ட புதிய விவரங்களை வைத்துக் காணாமல் போன பையனைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று பூமியே யோசித்திருந்தான்.

சொல்லப்போனால் இந்தப் பையனை வேலைக்குச் சேர்த்தது, இவன் காணாமல் போன பிறகு இவனைத் தேடி அலைந்தது, எல்லாமாகச் சேர்ந்துதான் முத்தக்காளுக்கு அவன்மேல் கோப் மூட்டியிருந்தன. இப்போது முத்தக்காளிடமிருந்து விலகி வந்த பின்பும் இந்தக் கிழவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பூமியின் மனத்தில் முன்னை விட வலுவாகி இருந்தது. பூமி அப்போது உடனே புறப்படத் தயாரானாள். சித்ரா அவனைத் தடுத்தாள்.

“இப்போது வேண்டாமே! காலையில் விடிந்ததும் உங்களிடம் கராத்தே படிக்கும் பிள்ளைகள் சிலபேரையும் உடனழைத்துக் கொண்டு போய் வாருங்கள்” என்றாள் சித்ரா.

தாமதம் காரியத்தை அழித்துவிடும் என்று கருதிய பூமி அவள் கூறியதை ஏற்கவில்லை. ஆனால் அவள் கூறியபடி தன்னிடம் கராத்தே கற்கும் சீடப் பிள்ளைகள் சிலரை உடன் ழைத்துக் கொள்ள மட்டும் சம்மதித்தான். மூன்று பேர் மட்டும் ஓர் ஆட்டோவிலேயே எண்ணூர் வரை போவதென்று முடிவாயிற்று.

எண்ணூரில் ஆட்டோவை விட்டுவிட்டுப் படகோ, அல்லது கட்டுமரமோ பிடித்துக் கடலுக்குள்ளே போய் அந்தக் கிராமத்தை அடைவது என்றும் ஏற்பாடாகியிருந்தது. படகு கிடைக்கவில்லை என்றால் கரையோரப் பகுதி மீனவர்கள் யாரையாவது பிடித்து அவர்கள் உதவியோடு மீன் பிடிக்கும்