30
சாயங்கால மேகங்கள்
நினைவுக்கு வருவதும், ஒன்றை நினைக்க முயன்றால் அது முன்னைவிட வேகமாக மறந்து போவதும் நம் மனத்தின் விசித்திர குணங்களில் ஒன்றாயிருக்கிறது!”
பரமசிவத்திடம் தான் கூறிய இந்த வாக்கியங்கள், தாயின் ஞாபகம், சித்ராவின் ஞாபகம் இரண்டிற்குமே. பொருத்தமாக அமைவதைத் தானே உணர்த்தான் பூமி. பரமசிவம் கேட்டான். “நீ நடந்துதான் வந்தாயா? ஆட்டோ என்ன ஆயிற்று? ரிப்பேருக்கு நிற்கிறதா? அல்லது...”
“நாலைந்து நாளைக்கு நான் ஓட்ட வேண்டாம்னு பேட்டை நண்பர்களாகச் சேர்ந்து பேசி, வேறு ஆளை ஓட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.”
“சில சமயங்களில் வேலை செய்யாமல் இருப்பதை விட வேலை செய்வதுதான் நிம்மதியைக் கொடுக்கும்.”
“நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பரமசிவம்! துறுதுறுவென்று ஓடியாடி வேலை செய்கிறவனைச் சும்மா இருக்கச் சொல்வதுதான் சிரமமாயிருக்கிறது.”
“உன்னைப் போல் சுபாவமுள்ளவனுக்கு அது நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும் பூமி!”
“லெண்டிங் லைப்ரரி எப்படி இருக்கிறது? புதுப் புத்தகங்கள் வாங்கிச் சேர்க்க வேண்டும் என்றாயே? எப்போது செய்யப் போகிறாய்?” என்று பரமசிவத்தை விசாரித்தான் பூமி.
“டெலிவிஷனும், சினிமாவும் வந்த பின் ‘டீப் ரீடிங்’ என்பது போல ஆழ்ந்து ஈடுபட்டுப் படிக்கிற பழக்கமே போய் விட்டது. பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு ‘டீப் ரீடிங்’ ஹேபிட்டைக் கொன்றுவிட்டன. உணவோ, வைட்டமின் சத்துள்ள ஆகாரங்களோ தேடாமல் சோர்வு வரும் போதெல்லாம் பீடியோ டீயோ குடித்தே காலந்தள்ளுகிற ஒரு விவரம் புரியாத கூலிக்காரனைப் போல் தமிழ் வாசகனும் வெறும் பக்கங்களைப் புரட்டுகிற பழக்கத்திலேயே படிப்பை முடித்துக்-