பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1


ஞானமில்லாத செருக்கும் செருக்கில்லாத ஞானமும் சோபிப்பதில்லை

சில விநாடிகளே நீடித்த அந்த மௌனத்தில் கவிதையின் அமைதி நிலவியது. அவள் அவளை நன்றியுணர்வு சுரக்கப் பார்த்தாள், அவனோ கடமையைச் செய்து முடித்து விட்ட சத்தியமான பெருமிதத்தோடு அவளைப் பார்த்தான். அருள்மேரி கான்வெண்ட் பள்ளி முகப்பிலேயே அவளைச் சந்திக்க முடிந்திருந்தது.

“உங்கள் முகவரியைத் தெரிந்து கொள்வதற்காகப் பையைத் திறந்து பார்க்கும்படி ஆகிவிட்டது. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்...”

“பரவாயில்லை! செய்ய வேண்டியதைத்தானே செய்திருக்கிறீர்கள்! இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?...”

“அப்படியில்லை ...... வந்து......?

“எப்படியில்லை .......?”

“ஒரு பெண்ணின் கைப்பை என்பது மற்றொருவர் பிரித்துப் பார்த்து விட முடியாத இங்கிதங்களும், அந்த ரங்கங்களும் நிறைந்தது..... அதை நான் பிரித்துவிட்ட தவற்றுக்காக.........”

அவளிடம் மறுபடி அந்த, அழகிய மெளனம். ஏதடா ஓர் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் என்னென்னவோ கதாநாயகன் மாதிரி வசனமெல்லாம் பேசுகிறானே என்று அவள் நினைத்திருக்க வேண்டும், போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய்க்

சா-1