பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சாயந்த கோபுரம்


மாஜி : அதை நான் குற்றமாகக் கருதவில்லை. ‘அன்புள்ள’ ::என்ற வார்த்தையைவிட அதிகமான மதிப்புடைய வேறு ::வார்த்தை எதையும் நான் மதிக்கவில்லை.

நீதி : நீதிமன்றத்தை அவமதிக்கின்றீர்.

மாஜி : நீதிபதி அவர்களே ! மன்னிக்க வேண்டும். இன்று சாடீனியன் சிங்காசனத்தை அலங்கரிக்கும் சார்லஸ் ஆல்பர்டு சிறிது நாட்களுக்கு முன்பு கொலைக்குற்றம் செய்தவர். அப்போதும் அவரை நான் ‘அன்புள்ள சார்லஸ்’ என்று தான் அழைத்தேன். அன்று அந்த என் அன்பான வார்த்தையை உங்களில் யாராவது கேட்டிருந்தால், அதுவும் குற்றமாகத்தான் செரிந்திருக்கும். ஏனெனில், ஒரு கொலைகாரனை, நான், அன்புள்ள என்று அடைமொழி கொடுத்து அழைப்பதால், என் நடவடிக்கையிலும் சந்தேகப்பட்டிருப்பீர்கள். மேலும், இனி ஒரு காலத்தில் இந்த அரசாட்சியே அவருக்கு நிலைக்காமல் போய் மீண்டும் அவர் சாதாரண மனிதராய் விட்டால், அப்போதும், நான், ‘அன்புள்ள சார்லஸ்’ என்றுதான் அழைப்பேன். நிலைமைக்கேற்றமாதிரி சொற்களை மாற்றிக் கொள்வதை விட, எப்போதும் அழைக்கத் தக்க நிரந்தரமான வார்த்தையைக் கையாண்டால் ஆபத்தில்லை என்று நான் முடிவு செய்தேன். அது மாத்திரமல்ல, ஜார் மன்னருக்குக் கடிதம் எழுதிய டால்ஸ்டாய் என்ற ருஷ்ய அறிஞரும், இப்படித்தான் அன்புள்ள நிக்கோ