பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

83


வளவு வசீகரத் தோற்றத்தோடு அனைவரும் வீற்றிருக்கின்றனர். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் ஒருவன் ஆடாமல் அசையாமல் வீற்றிருக்கின்றான். எந்தவித மாற்றமும் அவனிடம் காணமுடியவில்லை. எல்லா நாட்டுப் பிரதிநிதிகளும் வந்திருக்கின்றனர். அதைப்போலவே இத்தாலிய நாட்டு இளைஞன் மாஜினியும் அங்கே வீற்றிருந்தான். அவன் தான் நாம் மேலே சொன்ன மெளனி மாஜினி. தன் மரணதண்டனையை ரத்துசெய்ய வேண்டுமென்ற கண்டனக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மார்க்ஸ் அவர்களை நேரில் காணவேண்டுமென்ற அபிமானத்தாலல்ல அவன் வந்தது. அவரது அரிய கருத்துக்கள் தான் தற்சமயம் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிக்கு ஏதாவது துணை செய்யுமா என்பதைக் கவனிக்கவும், இந்த மாபெரிய சிங்கனேயாளன் எழுத்தைப் படித்திருக்கின்றோமேயன்றிப் பேச்சைக் கேட்கவில்லையே இதுவரை. அதையும் கேட்போம் என்ற ஆசையாலும் வந்திருக்கின்றான்.

ஆனால், கார்ல்மார்க்ஸ் எழுத்துக்களுக்கு இருந்த வன்மை பேச்சுக்கில்லை. சொல்லாற்றல் படைத்தவரல்ல மார்க்ஸ். ஆனால் இதுவரை உலகங் கண்டிராத எழுத்துக் குவியலை எரிமலையாக்கி இரும்புப் பெட்டிக்கு பக்கத்திலே வைத்தவர் இவரைவிட வேறு யாரும் இல்லை.

தலைமையுரை முடிந்தது. ஏதோ ஒன்றை எதிர்பார்த்து, எதிர் பார்த்து கிடைக்காமல்