பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சாய்ந்த கோபுரம்


ஆனால், தொழிலாளிகள், மானிட வர்க்கத்தின் மனசாட்சியை அளந்துகாட்டிய மாபெறும் சிந்தனையாளனை இன்று காணப்போகின்றோம் என்று கொந்தலிக்கும் கலிப்புக்கடலில் குதூகலிக்கின்றனர். மூலதனம் என்ற மருந்தால் வறுமை என்ற நோயைத் தகர்த்தெறிந்த வல்லவனைக் காணப் போகின்றோம; ஆண்டவன் வரப்பிரசாதமென அகில உலக மக்களை அறியாமையில் தள்ளி, உழைப்பை உறிஞ்சி வாழ்ந்த மந்தகாச வாழ்வினர் மதிக்கு ஒரு விதியை (கட்டளை) வகுத்துத் தந்த உயர்ந்தோனைக் காணப்போகின்றோம், சற்றெப்ப 30 ஆண்டுகள் நூல் நிலையத்திலேயே அல்லும் பகலுமாக உட்கார்ந்து, பல அறிஞர்கள் கருத்துக்களைப் படித்துத் தனக்கு முன்பும் பின்பும் யாராலும் வரையறுக்க முடியாத சீரிய திட்டத்தை எழுத்துருவில் தந்து, நடைமுறைக்குச் சாதனமான கொள்கைகளை வகுத்துக் குவலயத்துக்கு நல்கிய நல்லவணைக் காணப்போகின்றோம் என்று மக்கள் தோரணங்கட்டி வளைவுகள் அமைத்து விளம்பரங்கள் செய்து மாநாடு கூட்டி, மார்க்ஸ் அவர்களைத் தலைமை ஏற்கக் கேட்டுக்கொண்டனர் வரவேற்புக் கழகத்தார்.

தலைமைப் பீடத்தில் தலைவர் உட்காருவதற்குள் விண்ணதிர வாழ்த்தொலிகள், வான்முட்டக் கைதட்டல். எங்கும் ஒரே களிப்பு. எல்லாருடைய முகத்திலும் ஜீவகளை. உள்ளத்துக்கோர் புத்துணர்வு. உடலில் ஒர் புதுமுறுக்கு. இவ்