பக்கம்:சாவின் முத்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கூதிரை யாமம்


கருநீல வானத்து அரங்கில் கூத்திடும்
துளிதூங்கு முகில்கள், சித்திரக் குளிரை.
மலையில் ஊற்றின! வாழைக் குருத்து
வடிவம் போல வளரும் அருவி:
விரைந்து தன்னிடம் வருகின்ற நீரை
மடியில் வாரிச் செழித்தது!

கோடை வளர்த்த, தடுப்பை எல்லாம்
மழையின் வளத்தால் கழித்து; பனியில்
எடுப்பாய்ச் சிரிக்கும் அரசிலை மேலே
அலையும் நரம்புகள் போலக் காட்டு
ஆறு நடந்தது! அருவியும் தன்கை
நீட்டி அழைத்தது! சிவந்த வெள்ளத்து
முகமெலாம் திருமணம்! அகத்தில் பளிச்சிடும்
தோட்டத்துச் சிரிப்பால் தொட்டு, மேனியைக்
கூட்டி முடிந்து குதித்து ஓடின.

சுழிந்தபச் சாப்பைத் திருகி, புழுதியை
மிச்சம் இடாமல் உரித்து; விரைவாய்த்
தக்க நேரத்தில் சகாயங் தேட
கொக்கிக் காற்று குனிந்தது! பழுப்புகள்
அக்கரையாக அதன்மேல் குதித் தன!