உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஒருநாள் இரும்புத் திரை படத்தின் பிரத்தியேகக் காட்சி ஜெமினி ஸ்டுடியோவில் நடைபெற்றது. விகடன் ஆசிரியர் குழுவுடன் ஜெயகாந்தனும் அந்தப் படத்தைப் பார்க்க வந்திருந்தார். காட்சி முடிந்ததும், சாவி வாசன் அவர்களின் அறைக்குச் சென்று ஜெயகாந்தன் வந்திருக்கிறார். தாங்கள் அவரைப் பார்க்கிறீர்களா? என்று கேட்டார். ஜெயகாந்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று வாசனுக்குத் தெரிந்திருந்த போதிலும் அவரைச் சந்தித்துப் பேசும் அளவுக்கு முக்கியத்துவம் தர இஷ்டப்படவில்லை. சற்றுத் தயங்கினார். ஆனாலும் சாவி அத்துடன் விட்டுவிடவில்லை. 'ஜெயகாந்தன் ஒரு சாதாரண எழுத்தாளர் அல்ல. அவர் எழுத்து மிகச் சக்தி வாய்ந்த எழுத்து. பாரதியார் கவிதைகளில் புரட்சி செய்த அளவுக்கு, ஜெயகாந்தன் வசன நடையில் செய்து வருகிறார்' என்றார். 'நீ என்ன அப்படிப் புகழ்கிறாய்? அவ்வளவு பெரிய எழுத்தாளரா? சரி; அவரை அழைத்து வா. நான் பார்த்துப் பேசுகிறேன்' என்றார் வாசன். அப்படிச் சொன்னதுமே சாவி விரைந்து போய் ஜெயகாந்தனை அழைத்துச் சென்று வாசன் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு வெளியே வந்து விட்டார். "அப்புறம் அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஜெயகாந்தனைக் கேட்டால் சொல்லுவார் என்கிறார் சாவி. 180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/198&oldid=824550" இலிருந்து மீள்விக்கப்பட்டது