உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. விந்தை மனிதர் ஜி.டி. நாயுடு 'தெற்கு வளர்கிறது என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதுவதற்காக சாவி திருநெல்வேலி, சேலம், கோவை போன்ற பல மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள தொழிற்சாலைகளைப் பார்வையிடவும் பல தொழிலதிபர்களைச் சந்தித்து உரையாடவும் நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. அப்படிச் சந்தித்த பல தொழிலதிபர்கள் சாவிக்கு நெருங்கிய நண்பர்களாகவும் ஆனார்கள். கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பற்றி கட்டுரை எழுதுவதற்காகச் சந்தித்த தொழிலதிபர்களில் ஜி.டி.நாயுடுவும் ஒருவர். ஜி.டி.நாயுடுவுக்குச் சொந்தமான பல்வேறு தொழிற்சாலைகளைப் பார்த்து விகடனில் கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரைகள் வெளி யானபோது நாயுடு கோவையில் இல்லை. லண்டன் போயிருந்தார். லண்டனில் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தவர் தம்முடைய கப்பல் பயணத்தின்போது சாவிக்கு நீண்டதொரு கடிதம் எழுதினார். கோவை திரும்பியதும் சாவியைச் சந்திக்க விரும்புவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். விகடனில் எழுதிய அந்தக் கட்டுரைதான் சாவிக்கும் நாயுடுவுக்கும் மிக நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது. அப்புறம் சாவி எப்போது கோவைக்குப் போனாலும் ஜி.டி.நாயுடுவைச் சந்திக்காமல் திரும்பியதில்லை. சாவி கோவை வந்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்தாலே நாயுடுவும் மற்ற 181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/199&oldid=824552" இலிருந்து மீள்விக்கப்பட்டது