உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஆணையிட்டால் படத்திற்குக் கொடுக்கப்பட்ட கால்ஷீட்டை ரத்து செய்து அன்பே வா' படத்தில் நடிப்பதற்குச் செல்ல மாற்றிக் கொடுத்ததும் நான்தான். இவை எல்லாவற்றையும் நான் ஏன் செய்தேன் என்றால், புரட்சித்தலைவருடைய பெருமையையும் புகழையும் வளர்ப்பதற்காக அன்றைக்கும் பாடுபட்டவன் நான். முதல்முதலில் ஏ.வி.எம். நிறுவனத்திலே எம்.ஜி.ஆருடைய படம் வருகிறது. அதுவும் வண்ணப் படமாக வருகிறது. அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வருகிறதென்றால் அது மிகவும் பயன் உள்ளதாக அமையும். ஆகவே இந்தக் கட்டுரை எப்படியாவது வெளிவருவதற்கு வழி செய்தாக வேண்டும் என்று திட்டமிட்டு, சரி நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கிருஷ்ணாஜியிடம் சொல்லி அனுப்பி விட்டேன். அதன்பின் இந்தக் கட்டுரையை எப்படி ஆனந்த விகடனில் வெளியிட வைப்பது என்பது பற்றித் தீவிரமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தேன். அடுத்த நாள் காலையிலே திரு. ஏ.வி.எம். அவர்களோடு தொலைபேசியில் பேசினேன். 'சாவி அவர்களால் இப்படி ஒரு கட்டுரை எழுதப்பட்டு, ஆனந்த விகடனில் அது வெளிவருவதற்கு முயற்சி செய்தாக வேண்டும்' என்று சொன்னேன். அதற்கு ஏ.வி.எம். அவர்கள் "என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்' என்றார்கள். "நீங்கள் திரு. எஸ்.எஸ்.வாசன் அவர்களை நேரில் சந்தித்து, 'அன்பே வா ஏ.வி.எம். நிறுவனத்தினுடைய ஐம்பதாவது படம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஏ.வி.எம். நிறுவனத்தில் நடிக்கும் முதல் படம். மிகப்பெரிய பொருட்செலவிலே எடுக்கப்படுகிற படம். ஏ.வி.எம்மின் முதல் வண்ணப்படம். அதனால் இதற்கு ஆனந்த விகடனில் ஒரு செய்திக் கட்டுரை வந்தால் சிறப்பாக இருக்கும் என்று திரு. வாசனிடத்திலே எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் நிச்சயம் அதற்கு அனுமதி அளிப்பார்கள். அதற்குப் 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/217&oldid=824593" இலிருந்து மீள்விக்கப்பட்டது