உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பிறகு சாவி அவர்களின் கட்டுரை வெளியாக வழி கிட்டிவிடும். என்று சொன்னேன். உடனே ஏ.வி.எம். அவர்கள் வாசன் அவர்களை நேரில் சந்தித்து இந்தச் செய்தியைச் சொன்னவுடன், வாசன் அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு, நன்றாகச் செய்யலாம்; ஒரு நல்ல திரைப்படத்திற்குக் கட்டுரை வருவதில் தவறில்லை. நான் உடனே ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி தந்து விட்டார்." அப்படத்தில் தான் எம்.ஜி.ஆரோடு நடித்தது பற்றி தமக்கே உரிய நகைச்சுவையுடன் சாவி அவர்கள் பல கூட்டங்களில் குறிப்பிட்டுக் கைதட்டல் வாங்கியதுண்டு. திரு. ஏ.வி.எம்.சரவணன் சொல்கிறார்: "கூட்டங்களில் சாவி அவர்கள் பேசும்போது நகைச்சுவை இயல்பாக வந்து விழுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது. படத்தின் ஐம்பதாவது நாள் விழாவில் சாவி அவர்கள் பேசினார். பேச்சின் நடுவில் அன்பே வா' படம் பற்றி அவர் குறிப்பிட்டார். அன்பே வா’ படம் வெற்றிகரமாக ஓடியதற்கு என்ன காரணம் என்று கேட்டால் நீங்களெல்லாம் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி என்றெல்லாம் ஆளுக்கொரு காரணம் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான காரணம் அவர்களல்ல. அப்போதுதான் முதன் முதல் அறிமுகமாகி எம்.ஜி.ஆருடன் அப்படத்தில் புதிய வானம் புதிய பூமி... பாடல் காட்சியில் சில வினாடிகளே தோன்றும் ஒரு புதுமுக நடிகரின் மறக்க முடியாத நடிப்புதான் அப்படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட்டுச் சில வினாடிகள் இடைவெளி தந்து பிறகு அந்தப் புதுமுகம் நான்தான் என்று டைமிங்கோடு ஒரு போடு போட்டபோது அரங்கமே அதிர்ந்தது. 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/218&oldid=824595" இலிருந்து மீள்விக்கப்பட்டது