பக்கம்:சாவி-85.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் குங்குமம் முதல் இதழ் வெளியான ஒரு வாரத்துக்குள் கலைஞரிடமிருந்து சாவிக்கு அழைப்பு வந்தது. சாவி போயிருந்தார். சாவியைக் கண்டதும் கலைஞர் அவர்கள் தம் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து சாவியிடம் தந்து இது பற்றி என்ன நினைக்கிறீங்க?' என்று கேட்டார். திரு. ஏ.வி.பி.ஆசைத்தம்பி கலைஞருக்கு எழுதியிருந்த நீண்ட கடிதம் அது. 'குங்குமம் முதல் இதழில் காஞ்சி சங்கராச்சாரியாரின் படம் எப்படி இடம் பெறலாம்?' என்றும் தி.மு.க.வின் கொள்கைக்கு மாறாக அட்டைப்படம் அமைய எப்படி அனுமதித்தீர்கள்?’ என்றும் கோபமாகக் கேட்டிருந்தார். சாவி நடந்ததை நடந்தபடியே கலைஞருக்கு விளக்கம் தந்தார். அந்தப் படம் எதேச்சையாக அட்டையில் இடம் பெற்று விட்டதே தவிர, அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என்று தன்னிலை விளக்கமளிக்கவும் சரி, நீங்கள் போகலாம்: என்று கலைஞர் சொல்லவும் அத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சாவி அவர்கள் குங்குமம் பத்திரிகையின் ஆசிரியரான சமயமும் ஆனந்த விகடனை விட்டு மணியன் விலகியதும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் அமைந்துவிட்டது. ஒருநாள் மணியன் சாவி அவர்களுக்குப் போன் செய்து 'இதயம்' என்ற பெயரில் ஒரு பத்திரிகை தொடங்க விருப்பம். ஆனால் அந்தப் பெயர் ஏற்கனவே ஆற்காடு வீராசாமி அவர்களால் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தாங்கள்தான் அவரிடம் எனக்காகப் பேசி அந்தப் பெயரை வாங்கித் தர வேண்டும். அதற்கான விலையை கொடுக்கத் தயாராயிருக்கிறேன்' என்றார். சாவி இதுபற்றி திரு. வீராசாமி அவர்களிடம் பேசினார். ஆனால் அப்பெயரைத் தர வீராசாமி அவர்கள் மறுத்து விட்டார். 261

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/279&oldid=824730" இலிருந்து மீள்விக்கப்பட்டது