பக்கம்:சாவி-85.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மணியனிடம் இதைத் தெரிவித்த சாவி "இதயம் என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன? நீங்கள்தான் 'இதயம் பேசுகிறது என்ற தலைப்பில் பயணக் கட்டுரைகளை எழுதி வருகிறீர்களே, அந்தப் பெயரைக் கொண்டே பத்திரிகையைத் தொடங்கலாமே, ஏற்கனவே பிரபலமான பெயரல்லவா அது என்ற யோசனையை வெளியிட்டார். "இதயம் பேசுகிறது என்ற பெயர் ஒரு பத்திரிகைக்கு நீளமான பெயராக இருக்காதா? என்றார் மணியன். "முதலில் அப்படித் தோன்றலாம். ஆனால் அந்தப் பெயரே போகப் போகப் பழகிவிடும்" என்றார் சாவி. சாவியின் குங்குமம்' - மணியனின் இதயம் பேசுகிறது: சபாஷ், சரியான போட்டி' என்பதுபோல், தமிழ் வாசகர் களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவானது. குங்குமம் இதழுக்குப் பல ஊர்களிலிருந்து ஏஜெண்டுகள் அனுப்பிய டெபாசிட் பணமே பல லட்சங்களைத் தாண்டியது. "ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் பிரதிகளுக்கு மேல் ஆர்டர் குவிந்து கொண்டே போயிற்று. அப்போது மணியன் ஹிந்து பத்திரிகையில் தம் பத்திரிகை பற்றிப் பெரிதாக விளம்பரம் செய்து கொண்டார். அதைவிடக் கொஞ்சம் அதிகமாகவே குங்குமம்' இதழுக்கு ஆர்டர் வந்திருந்தும் நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் ஏதும் செய்யவில்லை" என்கிறார் சாவி, ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது கலைஞர் அவர்கள் தாமாக முன்வந்து தன் திறமையில் நம்பிக்கை வைத்து ஒரு பத்திரிகையின் பொறுப்பைத் தந்திருக்கையில் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்புடன் சாவி செயல்பட்டார். அதன் பயனாக, குமுதம், ஆனந்த விகடன் இரண்டுக்கும் அடுத்து குங்குமம் என்று சொல்லும் அளவுக்கு குங்குமத்தின் விற்பனை அதிகரித்தது. 262

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/280&oldid=824733" இலிருந்து மீள்விக்கப்பட்டது