ராணிமைந்தன் குங்குமம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், சாவியின் நெருங்கிய நண்பரும் டெல்லி ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயிர் நாடியுமான திரு. பாலு அவர்கள் ஒரு ஆசை விதையை சாவியின் உள்ளத்தில் ஊன்றினார். பாலு அவர்கள் டெல்லி அரசியல் உயர் மட்டத்திலும் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது. சாவியை வைத்து ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆவல் அவருக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. குங்குமம் தொடங்கப்பட்டு விட்டதால் சாவியை வைத்துப் பத்திரிகை நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டார். ஆனாலும் திடீரென்று ஒருநாள் அவர் சாவிக்குப் போன் செய்து "ஏன், நீங்க உங்க பேர்லயே ஒரு மாதப் பத்திரிகை நடத்தக்கூடாது? நான் அதற்கான எல்லா உதவிகளையும் - பொருளாதார உதவி உட்படசெய்யத் தயார்' என்றார். 'நான் இப்போது குங்குமம் பத்திரிகையின் ஆசிரியர். பத்திரிகையும் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. மாறன் அவர்கள் என்னை கெளரவமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படியிருக்க சொந்தப் பத்திரிகை, அது மாதப் பத்திரிகைதான் என்றாலும் அதற்கெல்லாம் இப்போது என் சிந்தனையில் இடமில்லை' என்று கூறி மறுத்து விட்டார். ஆனாலும் பாலு விடுவதாயில்லை. 'கலைஞரிடம் பேசி அனுமதி பெற்று நடத்தலாமே. மாதப் பத்திரிகைக்கு மறுப்பு சொல்ல மாட்டார். தைரியமாகக் கேட்டுப் பாருங்கள். எல்லா உதவிக்கும் நான் இருக்கிறேன்' என்று சாவிக்குக் கீ கொடுத்தார் டில்லி பாலு. அப்புறம் சில நாட்களுக்குப் பின்னர் டில்லி பாலு சென்னைக்கு வந்தபோது அவரும், அவரது நண்பர் ஆடிட்டர் குமார் (அ.இ.அ.தி.மு.க. எம்.பி.யாகவும் மத்திய அமைச்சராகவும் 263
பக்கம்:சாவி-85.pdf/281
தோற்றம்