பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
IX

இந்தத் தேசிய அவலத்தை, முற்றாகத் துடைக்க வேண்டும் என்று கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்களின் வெகுண்ட போராட்டங்கள், அமைப்பு ரீதியாக கிளர்ந்தெழுவதையும், சுரண்டும் ஆளும் வர்க்கம் மூர்க்கத்தனமாகத் துப்பாக்கியாலும், குண்டாந்தடியாலும் அடக்கியொடுக்கிச் செயல் படுவதையும் , நாம் காண்கிறோம். இந்த அநியாய அக்கிரமங்களை, கலை இலக்கிய வடிவங்களில் படைத்தளிப்பது, சமூக நல்நோக்கு கொண்ட படைப்பாளிகளின் பங்காகிறது. நடப்பு யதார்த்த வாழ்வை, நேர்மையோடு சித்தரிப்பதும், அதற்குமேல், இந்தக் கேவலமான வாழ்வை மாற்றிக் காணத்துடிக்கும் போராட்ட சக்திகளை ஊக்குவிக்க முயலுவதும், இக்காலப் படைப்பாளியின் பணியாகிறது. ஆனால் போராட்ட குணாம்சங்களை தமிழில் இலக்கியப் படைப் பாக மாற்றுவது, இன்று பலவீனப்பட்டே இருக்கிறது. ஆனாலும் குணாம்சரீதியில் வலுவுடையதாகவே பிறப்பெடுத்திருக்கிறது.

இந்த வளர்ச்சிப் போக்கில், நான், தோழர் சமுத்திரம் அவர்களின் படைப்புகளையும், அவரையும் எப்படிப் பார்க்கிறேன் என்று உணர்த்த வேண்டும். இங்கே, நான் செய்யப்போவது ஆய்வல்ல. அதற்கான இடமுமல்ல. இச்சிறுகதைத் தொகுப்புக்குள், பொதுவாக நின்று, நான், அவரைப் பார்ப்பதும், வெளிப்படுத்துவதும் நிகழ வேண்டும்.

அகமும் புறமும்

சு. சமுத்திரத்தின் ஒட்டு மொத்த படைப்பின் மூலமும்-உள்ளும், புறமும், இவரை, நான் புரிந்த வகையிலும் , என்னுள் இவர் மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும், சமரசமற்ற போராளியாகவும் விசுவரூபம் எடுத்து நிற்கிறார். தோழர் சமுத்திரம் எழுத்தில்