பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



VII


ஒன்று திரட்டப்பட்ட மக்கள் பேரியக்கத்தால்தான், முடியும். இந்தப் பரிணாமப் போக்குகளைப் புரிந்தும், தெளிந்தும் செயல்படும் படைப்பாளியே இச்சமூக மாறுதலெனும் நிகழ்வுகளுக்கு நெம்புகோலாக விளங்கமுடியும். இத்தகையதோர் படைப்பாளியே, காலத்தால் பேசப்படக் கூடியவன்.

பொய்மான் மாரீசர்கள்

இதில், நாம் ஒரு கண்ணோட்டத்தைப் பார்க்க வேண்டும். வேர்பிடித்துப் போன சுயநல, சுரண்டல் வெறி கொண்ட சமூகத்தை மாற்ற வேண்டும் என்று கூறினாலே போதும். ஏதோ தங்களது குடலைப்பிடுங்கியெடுத்தது போல, ஒரு பகுதி படைப்பாளிகள் முகஞ்சுழிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களில், மனிதாபிமானத்தைக் கொண்ட யதார்த்தவாதப் படைப்பாளிகளும் உண்டு. இவர்களுக்கு, சமூக வளர்ச்சியைப் பற்றி, விஞ்ஞான பூர்வக் கருத்துத் தெளிவு இருப்பதில்லை. இயற்கையாக நிகழும் இந்நிலைத்த சமூக அமைப்பை, யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற பழமை வாதத்தில் ஈடுபட்டு, முற்றிலும் முடங்கிப் போய் விடுகிறார்கள். இன்னொரு சாராரோ, படைப்பாளி என்று மக்களால் கவர்ச்சிகரமாகப் பேசப்படவேண்டும். அதற்கேற்ப எழுதவேண்டும். இந்தச் சமூக மாறுதலுக்காக போராட்டத் சக்திகளை உற்சாகப்படுத்தி, ஊக்குவிக்கும் படைப்பாளிகளையும். அவர்கள் சார்ந்த தத்துவங்களையும் தரங்கெட்டுச் சாடி, சுரண்டல் அமைப்பை பாதுகாத்து நிற்கவேண்டும் என்று செயல்படக்கூடியவர்கள். இவர்களிடத்தில் நெறியோ, நேர்மையோ, பார்க்க முடியாது. சமூகத்தைப் பின்னுக்கிழுத்துச் செல்லும் மூடநம்பிக்கைகளுக்குத் தூபமிடுவது, சாதி, மத, இன தூசனைகளுக்கு வித்திடுவது, சமத்துவத்துக்கு தீராத் துரோகம் புரிவது போன்ற செயல்களை, நைந்துபோன