பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

71


"இங்க எதுக்கு மேன் வந்திங்க?"

"நீங்க எதுக்கு கூப்பிட்டு அனுப்பினிங்க?"

"எதிர்த்தா பேசுற"

"நீ நான்னு பேசினா... நானும், நீன்னு பேச வேண்டியது வரும்..."

"ஐ ஸே யூ கெட் அவுட்"

"ஐ ஸே யூ ஷட் அப்"

மானேஜர் சதாசிவம், நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான். அப்படி குதித்துக் கொண்டே கத்தினார். ஒரு இளம் பெண் முன்னால், தன் அதிகாரம் 'சேலஞ்ச்' செய்யப்பட்டதை, அவர் விடத் தயாராகயில்லை.

அக்கெளண்டண்ட் சாம்பசிவம், வெளியே வந்து, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். ஒரு பெண்ணின் முன்னால், அவனை அவமானப் படுத்துவதா. அவள் கடைக்கண்பார்வையில், மண்ணில், அக்கெளண்டண்டான அந்த மாமலை மானேஜரும், ஒரு கடுகாம்.

மானேஜரின் பயங்கரமான இரைச்சலைக்கேட்டு ஊழியர்கள் அங்கே ஓடி வந்தார்கள். ஏர்கண்டிஷன் அறைக்குள் வியர்வை கொப்பளிக்க பல்லைக் கடித்துக் கொண்டிருந்த மானேஜரை ஆசுவாசப்படுத்திய அவர்கள், சிங்காரத்தின் கையைக் குலுக்கவும் தவறவில்லை.

மானேஜிங் டைரக்டரும் குலுக்கினார். சதாசிவம், சிங்காரத்தைப் பற்றியும், சிங்காரம் சதாசிவத்தைப் பற்றியும் எழுதிய புகார்களின் சிக்கல்களை தீர்க்க, சிக்கல் சிங்கார வேலனை வேண்டினார். மானேஜர், ஆபீஸர்கேடர்: அவர் புகாருக்கு வெயிட் கொடுத்தாக வேண்டும். சாம்பசிவம் யூனியனில் செல்வாக்குள்ளவன். அவனையும் அலட்சியம் செய்ய முடியாது.

'ஆக்‌ஷன்' எடுக்கவில்லையானால் ராஜினாமா செய்யப் போவதாக மானேஜரும், ஆக்‌ஷன் எடுத்தால் வேலை நிறுத்தம் செய்யப்படும்