பக்கம்:சிட்டுக் குருவி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சண்டை வலுத்து விட்டது
சத்தம் பெருக லானது
கண்டு களிக்க மக்களும்
கணக்கில் லாமல் கூடினர்

கம்பு ஒன்றை ஊன்றியே
கனிந்த வயது பாட்டியும்
வம்பு மூண்ட அவ்விடம்
வந்து கூற லாயினள்

16