பக்கம்:சிட்டுக் குருவி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடல் வளர நல்லதடா
வா, தம்பி, வா-அந்த
உப்பங் காற்றின் சக்தியடா,
வா, தம்பி, வா.


வெள்ளை மணல் மீதிருப்போம்
வா, தம்பி, வா- சற்றே
விளை யாடித் திரும்பிடுவோம்
வா, தம்பி, வா.


பிள்ளை களும் வந்திடுவார்
வா, தம்பி, வா-அங்கே
பெரிய வரும் கூடிடுவார்
வா, தம்பி, வா.

34