பக்கம்:சிட்டுக் குருவி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக வழியும் இல்லையே,
பொறுமை பறந்து போனதே,
வேக மாகத் தடியுடன்,
‘விறுவி’றென்று சென்றனன்.


தடியால் அந்த மனிதனைத்
தலையில் ஓங்கி அடித்தனன்.
அடிமேல் அடியும் வைத்தனன்.
ஆனால், அந்த மனிதனோ?


தாக்க வந்த திருடனைத்
தடுத்து விடவும் இல்லையே!
ஊக்க மாகத் திருப்பியே,
உதைக்கத் தானும் இல்லையே!



'குய்யோ, முறையோ’ என்றுமே,
குதித்து ஓட வில்லையே!
"ஐயோ என்று அலறியே,
அழவும் இல்லை, இல்லையே!


43