பக்கம்:சிட்டுக் குருவி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிட்டுக்குருவி

சின்னச்சின்னப் பறவையான சிட்டுக்குருவி.

தேடித்தேடித் திரிவதென்ன? சிட்டுக்குருவி.

என்னவேண்டும்? என்னவேண்டும் சிட்டுக்குருவி.

என்னிடம்நீ சொல்லவேண்டும், சிட்டுக்குருவி.


உணவு தேடித் திரிகின்றாயோ சிட்டுக்குருவி.

ஊக்கமது கைவிடாத சிட்டுக்குருவி.

பணமும்வேண்டாம்,காசும்வேண்டாம் சிட்டுக்குருவி.

பச்சைநெல்லை நான்தருவேன், சிட்டுக்குருவி,